Onetamil News Logo

இலவசமாக பண்ணைக் குட்டைகள்  அமைத்திட வேளாண்மை பொறியியல் துறையை தொடர்பு கொள்ளலாம் கலெக்டர் தகவல்

Onetamil News
 

இலவசமாக பண்ணைக் குட்டைகள்  அமைத்திட வேளாண்மை பொறியியல் துறையை தொடர்பு கொள்ளலாம் கலெக்டர் தகவல்   


 தூத்துக்குடி 2019 ஜூலை 10 ;தூத்துக்குடி மாவட்டத்தில் இலவசமாக பண்ணைக் குட்டைகள்  அமைத்திட வேளாண்மை பொறியியல் துறையை தொடர்பு கொள்ளலாம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,  தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள  கூறியதாவது.......தமிழகத்தில் காவேரி டெல்டா மற்றும் கடற்கரை மாவட்டங்களில், விவசாய நிலப்பகுதிகளில் மழைநீரை சேமித்து பயிருக்குத் தேவையான காலத்தில் பாசன நீரைப் பயன்படுத்தும் வகையில் இரண்டாம் கட்டமாக புதிதாக 8,202 எண்கள் பண்ணைக்குட்டைகள் ரூ.82.02 கோடி மதிப்பில் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
விவசாயிகளின் நிலப்பகுதிகளில் கிடைக்கப்பெறும் மழைநீரை பண்ணைக்குட்டைகள் அமைத்து மழைநீரை சேமிப்பதன் மூலம் பயிருக்குத்  தேவையான காலங்களில் பாசனம் செய்யப் பயன்படுத்த முடியும். அதே சமயம் அந்தப்பகுதியில் நிலத்தடி நீர் செறிவூட்டப்பெற்று நிலத்தடிநீர் மட்டம் காக்கப்படுவதோடு,  கடல்நீர் உட்புகாவண்ணம் நிலத்தடி நீரின் பண்பும் காக்கப்படும். பண்ணைக்குட்டையில் சேமிக்கப்படும் மழை நீரில் மீன்களை வளர்க்கவும் பயன்படுத்தலாம்.
இத்திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் கட்டமாக 2018-19 நிதியாண்டில்  139 பண்ணைக்குட்டைகள் ரூ.134.77 இலட்சம் மதிப்பில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் அமைக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் ரூ 1 இலட்சம் மதிப்பில் 515 பண்ணைக்குட்டைகள் ரூ.515.00 இலட்சம் மதிப்பில் 100 சதவிகித மானியத்தில்  அமைப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
30.00 மீட்டர் நீளம், 30.00 மீட்டர் அகலம், 2.00 மீட்டர் ஆழம் கொண்ட ஒரு பண்ணைக்குட்டையில் 1800 கன மீட்டர் மழை நீரை சேமிக்க இயலும்.
இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் நிலத்தின் வரைபடம், கம்ப்யூட்டர் பட்டா, முகவரி, புகைப்படம் ஆகிய விவரங்களுடன் தங்கள் வட்டாரத்திற்கு உரிய கீழ்கண்ட அலுவலகங்களில் விண்ணப்பித்து பதிவு செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
விவசாயிகள் அணுக வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி எண்: 
1.விளாத்திகுளம், புதூர், கோவில்பட்டி, கயத்தார் மற்றும் ஒட்டப்பிடாரம் வட்டார விவசாயிகள் ;உதவி செயற் பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, 27, எட்டையபுரம் ரோடு பிரதான சாலை, கனரா வங்கி பின்புறம், கோவில்பட்டி -04632 234280, 9442049591
2.தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் மற்றும் கருங்குளம் வட்டார விவசாயிகள் உதவி செயற் பொறியாளா,; வேளாண்மைப் பொறியியல் துறை, 4/122 யு1, ஸ்டேட் பாங்க் காலனி வடக்கு, ஆறுமுகச்சாமி காலனி அருகில், தூத்துக்குடி-0461 2347280, 9443694245. 
3.திருச்செந்தூர், சாத்தான்கும், உடன்குடி மற்றும் ஆழ்வார்திருநகரி வட்டார விவசாயிகள் ;உதவி செயற் பொறியாளா; வேளாண்மைப் பொறியியல் துறை, 65/10சி முத்து மாலை அம்மன் கோவில் தெரு, திருச்செந்தூர்- 04639 245280, 9443157710. 
மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,  தெரிவித்துள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo