Onetamil News Logo

தமிழகத்தில் சீமை கருவேல மரங்கள் மற்றும் யூக்காலிப்டஸ் மரங்களை அகற்ற வேண்டும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நத்தத்தில் நிருபர்களுக்கு பேட்டி 

Onetamil News
 

தமிழகத்தில் சீமை கருவேல மரங்கள் மற்றும் யூக்காலிப்டஸ் மரங்களை அகற்ற வேண்டும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நத்தத்தில் நிருபர்களுக்கு பேட்டி 


திண்டுக்கல்,2019 செப். 11 ; திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் திருமண விழாவிற்கு வருகை தந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு  பேட்டி வருமாறு
2016_ல் தேர்தலில் போட்டிஇட்டோடம் 2021 -ல் மீண்டும் போட்டியிடுவோம்.
எங்கள் கட்சியின் ஓட்டுவங்கி உயர்ந்து கொண்டே வருகிறது. கோயம்புத்தூர் சிறையில் நானும் கொளத்தூர் மணியும் சிறையில் இருந்தோம் அப்போது நாங்கள் இருந்த அறைக்கே பக்கத்திலேயே தமிழ் தேசிய விடுதலை தலைவர் செக்கிழுத்த செம்மல் வ உ சி இருந்த இருந்த அறையில் நாங்கள் இருந்தது எங்களுக்கு மகிழ்ச்சி பெருமையும் அளிக்கிறது. நாட்டின் பொருளாதார வீழ்ச்சியே மத்திய அரசின்  100 நாள்சாதனை. திமுக ஆட்சிக்காலத்தில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதா?இந்த கதையை முடிக்க மத்திய அரசின் 100 நாள் சாதனை.

தமிழகத்தில் கல்வி முறையை மாற்றியமைக்க வேண்டும்.  சுகமாக இருப்பதை சுமையாக மாற்றிவிட்டார்கள். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வர வாய்ப்பில்லை. இன்னும் ஒரு வருடம் தான் இருக்கிறது எப்படி உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியும்.இந்தியா 130 கோடி மக்கள் தொகை கொண்ட நாடாகும்.வங்கி பரிவர்த்தனையை செல்போன் மூலம் செயல்படுத்தலாம். இதனால் முதலாளிகளின் முகவராக அரசு செயல்படுகிறது.தமிழகத்தை பொறுத்தவரை சட்டம் சரியாகத்தான் இருக்கிறது ஒழுக்கம்தான் குறைந்துள்ளது.தமிழகத்தில் சீமை கருவேல மரங்களை அடியோடு அகற்ற வேண்டும்.இந்த மரங்களில் பறவைகள் கூட கூடு கட்டாது.
மரங்கள் நடுவதற்கு பல கோடி ரூபாய் அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் முறையாக பராமரிக்க படவில்லை. கேரளாவில் புகைப்படங்கள் காலியிடங்கள் எங்காவது மரங்கள் இல்லாமல் உள்ளதா?
அதைப்போலவே தமிழகமும் பசுமையாக வரவேண்டும். மழை வளம் பெருகி நீர் மட்டம் உயர்வதற்கு மரங்கள் வளர்க்கப்பட வேண்டும்.அரசு சட்டமே நூறு மரங்கள் வளர்த்தால் அதை முறையாக அனுமதி பெற்று அதில் ஒரு மரங்களை வெட்டிக் கொள்ளலாம். தமிழகத்தில் மண்வளமே குறைந்துள்ளது.தமிழக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெலுங்கானாவின் ஆளுநராக பதவி ஏற்றது வரவேற்கத்தக்கது. இவ்வாறு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo