Onetamil News Logo

லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலயப் பெருவிழா வெகுவிமரிசையாக கொண்டாட்டம்

Onetamil News
 

லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலயப் பெருவிழா வெகுவிமரிசையாக கொண்டாட்டம் 


தூத்துக்குடி 2019 பிப்ரவரி 10 ; தூத்துக்குடி நகரில் உள்ள லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலயப் பெருவிழா வெகுவிமரிசையாக கொண்டாப்பட்டது.
தூத்துக்குடி நகரில் உள்ள லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலயப் பெருவிழா  01-02-19 அன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக ஆரம்பமானது. இதனைத் தொடர்ந்து தினமும் நவநாட்கள் திருப்பலி நடைபெற்றது. 
திருவிழாவின் முக்கிய நிகழ்வுவானது.
சனிக்கிழமை அன்று காலை 6.00 மணிக்கு அன்னையின் அற்புதக் கெபியில் வைத்து, பங்குத்தந்தை பிராங்கிளின் பர்னாண்டோ தலைமையில் நவநாள்த் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. அன்று மாலை 6.00 மணிக்குத் திருவிழா மாலை ஆராதனையானது, மணப்பாடு வட்டார முதன்மைக்குரு அருள்திரு. சகாயம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அருள்தந்தையர்கள் ரெனால்டு மிசியர், நோயல்ராஜ், சேசு நசரேன் முன்னிலை வகித்துச் சிறப்புப் பிரார்த்தனை செய்தார்கள் 

இன்று ஞாயிற்றுக்கிழமை, திருவிழா சிறப்பு ஆடம்பரத் திருப்பலி, தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மைக்குரு பேரருள்திரு. கிருபாகரன் அவர்கள் தலைமையில் சிறப்பிக்கப்பட்டது. இதில் 31மாணவ-மாணவிகளுக்கு முதல் திருவிருந்து வழங்கப்பட்டது. அருள்திரு. லியோ ஜெயசீலன் மற்றும் அருள்திரு. லெயோலா டிரோஸ் இருவரும் முன்னிலை வகித்தனர். இன்று மாலையில் நற்கருணை ஆசிருடன் கொடியிறக்கும் திருநிகழ்வும், அதனைத் தொடர்ந்து அன்பியங்கள் இணைந்து வழங்கிய கலைவிழாவும் நடந்தன.
விழா ஏற்பாடுகள் அனைத்தையும் பங்குத்தந்தை அருள்திரு. பிராங்கிளின் பர்னாண்டோ தலைமையில் பங்குப் பேரவையினர் செய்திருந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo