Onetamil News Logo

வளமுடன் வாழ்க......நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதையே அறுவடை செய்வீர்கள் .உங்களது எண்ணங்கள் தான் விதை .உங்கள் அறுவடை நீங்கள் விதைக்கும் விதையை பொறுத்துதான் இருக்கும்.

Onetamil News
 

வளமுடன் வாழ்க......நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதையே அறுவடை செய்வீர்கள் .உங்களது எண்ணங்கள் தான் விதை .உங்கள் அறுவடை நீங்கள் விதைக்கும் விதையை பொறுத்துதான் இருக்கும்.


 நம் எண்ணங்கள் தான் நம் வாழ்வை உருவாக்கும்”,என  மார்கள் ஆரெலியஸ், என்ற 200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பேரரசர் கூறினார். அவர் மேலும் கூறினார், “உங்கள் வாழ்வின் மகிழ்ச்சி உங்கள் எண்ணங்களின் தரத்தைப் பொறுத்து இருக்கிறது;  அதனால், அதற்கேற்றாற்போல் பாதுகாத்துக் கொள்ளுங்கள், நன்மைக்கும், நியாயமான இயற்கைக்கும் பொருத்தமற்ற எந்த கருத்துக்கும் இடம் கொடுக்காமல் கவனித்துக் கொள்ளுங்கள்.”
இன்றைய மனோதத்துவத்தில், புலனுணர்வு சார்ந்த நடத்தை சிகிச்சை (cognitive behavioral therapy), நம்முடைய எண்ணங்கள் மற்றும் எண்ணங்களின் வடிவங்களில் தனிச் சிறப்பு கவனம் செலுத்துகிறது.  முனைவர் டேவிட் பர்ன்ஸ் என்பவர் சோகத்திற்கும், மன அழுத்தத்திற்கும் வேறுபாடு – சோகம் என்பது, தவறாக நேர்ந்து விட்ட ஒரு வாழ்க்கைச் சம்பவத்தால் ஏற்படும் சோகம் மட்டும் தான்.  ஆனால், மன அழுத்தம் ஒரு குறிப்பிட்ட வாழ்க்கைச் சம்பவத்துடன் தொடர்பு படுத்தி ஏற்படக்கூடிய எதிர்மறையான எண்ணப்பாங்கு தான்.
உங்கள் எண்ணங்கள் ஒன்று, உங்களை உருவாக்கும்.  அல்லது, உங்களை முறித்து விடும்.  ஸ்டீவ் ஜாப் ஒரு முறை கூறினார், ‘தங்களால் உலகை மாற்ற முடியும் என எண்ணும் அளவுக்கு பைத்தியக்காரத்தனமாக இருப்பவர்கள் சாதாரணமாக அதைச் செய்வார்கள்.’
வளமுடன் ! வாழ்க !  
நாம் எல்லோருக்கும் பிரச்சினை இங்குதான் உள்ளது , நாம் எப்போதும் தனக்கு என்ன வேண்டாமோ அதை பற்றி மட்டும்தான் சிந்தித்து கொண்டு இருக்கிறோம் ,பிறகு எனக்கு மட்டும் ஏன் வாழ்கையில் எனக்கு பிடிக்காத அல்லது விரும்ப தகாத நிகழ்சிகளாக நடக்கிறது என்று புலம்புகிறோம் . நீங்கள் சிந்திக்கும் எண்ணங்கள் மற்றும் வார்த்தைகளையும் உற்று கவனித்து கொண்டே இருங்கள் , ஏன் என்றால் நீங்கள் உங்களுக்கு தேவையானதைவிட,எது தேவை இல்லையோ அதை பற்றி தான் யோசித்து கொண்டிருப்பதும், பேசிகொண்டிருப்பதும் தெரிய வரும், நீங்கள் ஒரு எண்ணத்தை நினைகிறீர்கள் என்றால் அது நல்லதா கெட்டதா என்றெல்லாம் ஈர்ப்பு விதி சட்டை செய்வதில்லை ,அது வெறுமனே உங்கள் எண்ணங்களுக்கு ஏற்ப இயங்குகிறது . ஈர்ப்பு விதி ஒரு இயற்கை விதி ,அது உங்களது எண்ணங்களை பெற்றுக்கொண்டு அதையே உங்களது வாழ்க்கையின் அனுபவங்களாக உங்களுகே திருப்பி அனுப்பும் , நீங்கள் என்ன என்னிகொண்டிருகிறேர்களோ அதை அப்படியே உங்களுக்கு திருப்பி கொடுக்கும் ஒரு விதியாகும் . ஈர்ப்பு விதி என்பது மிகவும் கீழ்படிதல் உள்ள விதி நான் இனி கடன் வாங்க மாட்டேன் என்பதை பற்றி நீங்கள் சிந்தித்து கொண்டிருந்தால் , உடனே விதியானது நீங்கள் எதை சிந்தித்து கொண்டு இருக்கீரீர்களோ ,அதை உங்களிடம் மீண்டும் கொண்டு வந்து சேர்க்கும் , அதற்கு நல்லது ,கெட்டது தெரியாது . நீங்கள் தவறான எண்ணங்களை சிந்திக்கும்போது அது அப்படியே எடுத்து கொள்ளும் ,அதற்கு சில உதாரணம் " நான் தினமும் அலுவலகத்துக்கு லேட்டாக போக மாட்டேன் நான் தினமும் அலுவலகத்துக்கு லேட்டாக போவேன் " " இவ்வளவு வேலைகளை என்னால் செய்ய முடியாது இவ்வளவு வேலைகளை என்னால் செய்ய முடியும் " "எனக்கு காய்ச்சல் வரகூடாது " எனக்கு காய்ச்சல் வர வேண்டும்" "நான் இனி எந்த விசயத்திலும் தோற்க மாட்டேன் நான் இனி எந்த விசயத்திலும் தோற்ப்பேன் " நீங்கள் நினைத்து கொண்டிருப்பதை ஈர்ப்பு விதி அப்படியே உங்களுக்கு திருப்பி அளிக்கிறது . மொத்த பிரபஞ்சமுமே எண்ணத்திலிருந்து உதித்ததுதான் என்று குவாண்டம் இயற்பியலாளர்கள் கூறுகின்றனர் . நாம் எல்லா சமயங்களிலும் சிந்தித்து கொண்டு தான் இருக்கிறோம் ,நாம் பேசிக்கொண்டிருக்கும்போதும் ,டிவி பார்த்து பேசிக்கொண்டிருக்கும்போதும், கார் ஓட்டும்போதும் , வேலை செய்து கொண்டிருக்கும்போதும் ,நாம் சிந்திக்காத ஒரே நேரம் தூங்கும் நேரம் மட்டும்தான் ,ஆனால் நாம் தூங்க முயலும் பொது கடைசியாக நாம் சிந்தித்த வற்றை ஈர்ப்பு விதியானது , அசை போட்டு கொண்டிருக்கும் ,அதனால் ---------------நாம் தூங்க போகும் போது நல்ல எண்ணங்களை மனதில் நினைத்து விட்டு தூங்க வேண்டும். இன்றைய உங்கள் சிந்தனை நாளைய வாழ்க்கை ,நீங்கள் எவற்றை குறித்து அதிகமாக சிந்திக்கிறீர்களோ அவையே உங்களது வாழ்வாக மலரும் .நீங்கள் தான் உங்கள் வாழ்வை சிருஷ்டிகிறீர்கள் ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------.நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதையே அறுவடை செய்வீர்கள் .உங்களது எண்ணங்கள் தான் விதை .உங்கள் அறுவடை நீங்கள் விதைக்கும் விதையை பொறுத்துதான் இருக்கும்.   எண்ணங்கள் தான்!  வித்தியாசமாக சிந்தியுங்கள்.  சக்தியுடன் சிந்தியுங்கள். இவ்வுலகில் நன்மைகளைக் கொண்டுவருவதற்கு உங்களை ஒரு கருவியாக்குவான் என்று நினையுங்கள், தன்னம்பிக்கை வார்த்தைகளில் அவற்றை உருவேற்றுங்கள். வெறும் கனவாக இல்லாமல், யதார்த்தம் போல நுணுக்கமாக காட்சிப்படுத்துங்கள்.
* உங்கள் திட்டத்தை மிக எளிமையாக எழுதுங்கள். யோசிப்பது நடக்காது. உட்கார்ந்து விரிவாக எழுதுவது நடக்கும்.
* உங்கள் தொழில் / வேலை எது என்பதையும் அதற்கான சரியான நோக்கத்தையும் தெளிவுபடுத்துங்கள்.
* உங்கள் நெருக்கடிகளில் தென்படும் அனுகூலங்களை பட்டியல் இடுங்கள். இவை தான் நம்பிக்கை தரும் பாடங்கள். வெற்றிக்கான சிந்தனைகள்.
* கூட்டணிதான் வெற்றி பெறும். எல்லாரிடமும் கூடி இயங்க கற்றுக்கொள்ளுங்கள்.
* நல்ல திட்டமும் வெளிப்படையான நிர்வாகமும் நெருக்கடிகளைக் குறைக்கும். நெருக்கடிகள் குறையும்போது தான் அந்த சக்தியை ஆக்கத்திற்கு செலவிட முடியும்.
* மாறுதல்களை நேசியுங்கள்.
* உங்கள் ஆதார நம்பிக்கைகளை அடிக்கடி ஆராயுங்கள். தேவைப்படும்பொழுது அவற்றை மாற்றத் தயங்காதீர்கள்.
* அளவற்ற, குறையா செல்வத்தில் நம்பிக்கை கொள்ளுங்கள். உங்கள் தேவைக்கு ஏற்ப அது என்றும் கிட்டும் என்று நம்புங்கள்.
* கொடுப்பதில் அளவு வேண்டாம். கொடுப்பதே பெருகும். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கொடுங்கள்.
* ஆன்மிக தேடல் உதவும். பிரார்த்தனையும் தியானமும் கை கொடுக்கும்.
* பிடித்ததை செய்யுங்கள். வெற்றி கிட்டும். உங்களுக்கும் உலகத்திற்கும்.
இவை பொது அறிவுரைகள் போல தோன்றினாலும் ஒவ்வொரு பாடமும் ஒரு அறிவியல் விளக்கப் பாடம் போல சொல்லப்படுகிறது.
செல்வம் மனப்பான்மை சார்ந்தது என்பதைச் சொல்லும் புத்தகங்கள் புதிதல்ல. நெப்போலியன் ஹில் இதன் பிதாமகர். செல்வந்தர் ஒவ்வொருவராய் பேட்டி கண்டு அவர்களின் எண்ணங்கள். வாழ்க்கை முறைகள், முடிவு எடுக்கும் திறன்கள் போன்ற உளவியல் சமாச்சாரங்களை எல்லாருக்கும் புரியும் வண்ணம் எழுதினார். அது பல வெள்ள மடைகளைத் திறந்து விட்டது.
இதற்கும் முன்னர் நம் எண்ணங்கள்தான் நம் வாழ்க்கை என எழுதி ஆங்கில “சுய உதவி” இலக்கியத்திற்கு வித்திட்டவர் ஜேம்ஸ் ஆலன்.
1904-ல் As a Man Thinketh என்று அவர் எழுதிய புத்தகத்தின் தாக்கம் இல்லாமல் இது வரை ஒருவரும் எழுதவில்லை. இந்த புத்தகமும் அதற்கு விதி விலக்கில்லை.சொந்த வாழ்க்கை நிகழ்வுகள் வலு சேர்க்கின்றன. இந்த பாடங்களால்தான் நான் கோடீஸ்வரன் ஆனேன் என அவர் சொல்லும் விஷயங்கள் யாவும் நமபத்தகுந்தவை.
பிடித்ததை ஆசையுடன் செய்து அதில் வசதியும் புகழும் செல்வமும் வந்தால் வேண்டாம் என்றா சொல்லப் போகிறோம்? எம். எஃப். ஹுசைனும், அமீர்கானும், விக்ரம் சேத்தும், பிரணாய் ராயும், டெண்டுல்கரும், ஏ.ஆர். ரஹ்மானும் கலை, காசு இரண்டிலும் சாதிக்கவில்லையா?
மார்க் ஆலனாலும் இவர்களாலும் முடிந்தது உங்களாலும் என்னாலும் முடியாதா என்ன?
                                                                                                                                                                                                       
 மனித வாழ்க்கை ஒருஅற்புதமான வரம். இந்த பிரபஞ்சத்தில் எண்ணில் அடங்கா மனிதர்கள் காலம் போற்றத்தக்க வகையில் தங்களது உன்னத, உயர்வான, வெற்றிகரமான வாழ்க்கையின் மூலம் பல்வேறு தளங்களில் தடம் பதித்துஉள்ளார்கள் என்பது வரலாற்றுச்சான்று.இன்னும் எண்ணற்றவர்கள் இதே போன்று தடம் பதிக்க ஆயத்தமாக உள்ளார்கள். நம்மில் பலர் சற்று தயங்கியவாறு தாழ்ந்த மனப்பான்மையுடன் என்னாலும் இவ்வுலகத்தில் தடம் பதிக்க முடியுமா? என்ற கேள்வியுடன் வாழ்ந்து வருகிறோம் என் பது இயற்கையான உண்மை.வாழ்க்கையை சில நபர்களால் தான் சிறப்பாக வாழ முடிகிறது. மற்றவர்கள் எல்லாம் வாழ்க்கையை நகர்த்திக் கொள்ள பழகிவிட்டோம் என சமூக பிரதிபலிப்பில் தோன்றும் கருத்தாக கூட இதை எடுத்துக் கொள்ளலாம்.இந்த நிலை நிரந்தரமானதா? மாற்றிக் கொள்ள முடிந்ததா? என்று சற்று யோசித்தால், இதில் மறைந்திருக்கும் மாபெரும் உண்மை வெகுவாக எல்லோருக்கும் புலப்படும். அது வேறு ஒன்றும் இல்லை. ஒவ்வொருவரின் வாழ்க்கைத்தரம் என்பது அவர்களின் மனநிலையை பொறுத்தே அமைகிறது என்ற உண்மை தான். ஒவ்வொரு மனிதருக்கும் அவர்களது வாழ்க்கை பல்வேறு அர்த்தங்களை கொடுக்கும்.சிலருக்கு வாழ்க்கை சுவாரசியமாக அமையும். சிலருக்கு வாழ்க்கை விருப்பமற்ற நிலையில் அமையும்; உற்சாகமாக அமையும். இன்னும் சிலருக்கு வாழ்க்கை கேள்விக்குறியாக கூட அமையும்.எந்த ஒரு மனிதனும் பிறக்கும் போதே அந்த வாழ்க்கை நிலைகளில் பிறந்து விடுவதில்லை. இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் அபாரமான சக்திகளை கொண்டும், ஆற்றலைக் கொண்டும் பிறக்கத்தான் செய்கின்றனர். ஆனால் அவர்களது வாழ்க்கை ஓட்டத்தை பலகாரணிகள் பல திசைகளில் இருந்து இழுக்கின்றன. இதுவே அவர்களது வாழ்க்கை முறையில் பிரதிபலித்து சமுதாயத்தில் அவர்களை பல வகையான மனிதர்களாக அடையாளம் காட்டுகிறது.
வண்ணமயமான வாழ்க்கை : வாழ்க்கையை உற்சாகத்துடன் வாழ கற்றுக் கொண்டால், அந்த உற்சாகத்தில் பிறக்கும் ஆனந்த மான மனநிலை, அவர்களின் அபூர்வ சக்தியை முழுமையாக வெளிப்படுத்தி மகிழ்ச்சி பொங்கும் வண்ணங்களுடன் பிரதிபலிக்கிறது. வண்ணமயமான வாழ்க்கை முறையை பெறுவதற்கு அல்லது பிரதிபலிப்பதற்கு ஒவ்வொரு மனிதனும் அவர்களிடம் உள்ள ஆரோக்கிய எண்ணங்களின் தரத்தை பிரதானமாக பயன்படுத்திக் கொள்ள ஆளுமை பெற வேண்டும்.ஏனென்றால், எண்ணங்கள் தான் மனிதனுக்கு செயல்திறன்களை அளிக்கும் சக்தியாக அமைகிறது. அடிப்படையாக, வெற்றிகரமான வாழ்க்கையை மேற்கொள்வதற்கு, வெற்றிகரமான செயல்களை ஒவ்வொரு மனிதனும் செய்வது இன்றியமையாததாக இருப்பது மட்டுமல்ல, அத்தியாவசியமாய் தேவைப்படும் வாழ்க்கை முறை. வண்ணமயமான உற்சாகம் பொருந்திய வாழ்க்கையை சமூகத்திற்கு பிரதிபலிக்க, ஒவ்வொரு மனிதனும் தனக்கு தேவையான ஆரோக்கிய எண்ணங்களை வளர்த்துக் கொள்ளும் மனப்பக்குவத்தை அடைய வேண்டும்.இவ்வாறு உயர்ந்த எண்ணங்களை கொண்டு தங்களது வாழ்க்கையை வெற்றிப்பாதையில் செலுத்த முற்படுபவர்களுக்கு என்றுமே வாழ்க்கை வண்ணமயமான வெற்றிகளை அள்ளித்தரும். இதற்கு எதிர்மறையாக வெற்றி பெறுவதற்கான எண்ணத்தை கொண்டிராமல், எந்த ஒரு மனிதனும் சமூகத்தில் மகத்தான வெற்றி பெற்றிட முடியாது.
எண்ணங்களின் வகைகள் : எண்ணங்களின் அடிப்படையில் தான் மனித வாழ்க்கையின் செயல்பாடுகள் உதயமாகிறது என்ற மனோதத்துவ உண்மையை எடுத்துக் கொண்டால் அந்த எண்ணங்கள் எல்லா நேரங்களிலும் ஒரே பக்குவத்தையோ, தன்மையையோ அளித்துவிடுவதில்லை. இதற்கு காரணம் மனதுக்குள் எழும் எண்ணங்கள் பல வகையில் வரையறுக்கப்படுகின்றன.வெற்றி பெற்ற மனிதர்களாக திகழ வேண்டும் என்றால் அதற்கு மிகவும் அவசியமானது ஆரோக்கிய எண்ணங்கள் தான். சாதாரண நிலையில் ஒவ்வொரு மனிதனும் தனக்குள் நம்பிக்கையை அளிக்கும் வகையில், சக்தி படைத்த மனநிலை என்று இதை எடுத்துக் கொள்ளலாம். எந்த ஒரு வாழ்க்கை சூழ்நிலையிலும் நம்மால் வாழ்ந்திட முடியும் என்றும் எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ள முடியும் என்றும், எந்த நிலையிலும் தமது செயல் திறன்களை நல்ல நோக்கத்திற்காக அளித்திட முடியும் என்னும் எண்ணங்களை பிரதிபலிக்க கூடியவர்கள் தான் ஆரோக்கிய சிந்தனையை கொண்டவர்கள்.ஆரோக்கியமற்ற எண்ணங்கள் தனது வாழ்க்கை முறைக்கு பயன் அளிக்க முடியாத மனநிலையை கொண்டதாக இவ்வகையான எண்ணம் கருதப்படுகிறது. மனிதனுக்குள் எழும் தீமையான நோக்கங்களை கொண்டதாகவும், தன்னைத்தானே தாழ்த்தி மதிப்பீடு செய்து கொள்ளும் நிலை உடையதாகவும், வாழ்க்கையில் எதிர்வரும் சவால்களை எதிர்கொள்ள முடியாத நிலையாகவும் தோல்வியே, தனக்கு எப்போதும் நேரிடும் என்ற மனபக்குவத்தை வெளிப்படுத்தும் நபர்கள், இவ்வகையான எண்ணங்களை உடையவர்கள் என்று அறியப்படுகிறார்கள்.குறிக்கோளற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுபவர்கள் தனது செயல் திறன்களினால், எந்த ஒரு காரியத்தையுமே செய்ய இயலாத சிலந்தி வலைக்குள் மாட்டிக் கொண்டது போல் உணர்வார்கள். இவ்வகையான எண்ணம் கொண்டவர்கள், தனது வாழ்க்கையில் அதிக நேரம் ஒன்றும் பயன்படாத எண்ணங்களையே சிந்தித்து பொழுதைக்கழிப்பவர்கள் என்று எடுத்துக் கொள்ளலாம்.
ஆரோக்கிய எண்ணம் : 'எண்ணம் போலதான் வாழ்க்கை' என்ற சொல்லுக்கு ஏற்ப ஒவ்வொரு மனிதனும் தனக்குள் உதயமாகி வெளிப்படும் எண்ணத்தின் அடிப்படையில் வாழ கற்றுக் கொள்ள வேண்டும். இன்னும் குறிப்பாக இத்தகைய வாழ்க்கை தனக்கு வேண்டும் என்று நிர்ணயித்து, அதற்கு தேவையான வகையில் ஆரோக்கிய செயல்களை உருவாக்கும் எண்ணங்களை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.ஆரோக்கிய எண்ணங்களை பிரதானமாக தனக்குள் கொண்டு, தனது வாழ்க்கை நிலையில், அதை தனக்கு சாதகமாக வெளிப்படுத்தி செயல்படும் மனிதர்களுக்கே, வாழ்க்கை பெரிதும் வெற்றிகரமாகவும் மகிழ்ச்சி உடையதாகவும் அமையும். இவ்வகையான ஆரோக்கிய எண்ணங்களை எல்லோரும் வளர்த்து கொள்ள முடியுமா?எண்ணங்கள், எல்லோரின் மனதிலுமே எழக்கூடிய மிகவும் இயற்கையான வாழ்க்கை கொடை. அதனை உயிர் உள்ள வரை எவராலும் நிறுத்திவிட முடியாது. எண்ணங்களை தமது வாழ்க்கை முறைக்கு தேவையான வகையில், ஆரோக்கியமாக, மனிதர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்.
தெளிவான சிந்தனை : ஆரோக்கிய எண்ணங்களை தனது வாழ்க்கையில் பிரதான நிலைக்கு கொண்டு வர, எந்த மனிதனும் தனக்குள் எழும் ஆரோக்கியமற்ற எண்ணங்கள் தோன்றுவதை குறைப்பதற்கு பழகிக் கொள்ள வேண்டும். எளிய பயிற்சி முறைகளில் தெளிவான சிந்தனையை பயன்படுத்தி இதை பழகிக்கொள்ளலாம்.ஆரோக்கிய எண்ணத்தை பிரதானமாக்கி கொள்வதற்கு ஒவ்வொரு மனிதனும் தனக்குள் ஆக்கபூர்வமான கனவுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வகையான கனவுகள் உறக்கத்தில் வருவதல்ல. விழித்திருக்கும் போது பெரிய வெற்றியையோ, பெரிய சாதனையையோ தான் நிகழ்த்த போவதாக தனது மனதிற்குள் நம்பிக்கையை விதைப்பதன் மூலம், தனது மனத்திரையில் அந்த அனுபவத்தை காணும் பக்குவத்தை வளர்க்க வேண்டும்.ஆரோக்கிய எண்ணங்கள் தான், ஒரு மனிதனுக்கு சிறப்பான அடையாளத்தை பெற்றுத் தரும் என்று மனிதர்கள் தங்களது மனதில் நிலைநிறுத்திக் கொள்ளல் வேண்டும்.ஆரோக்கிய எண்ணங்கள் தான் சமுதாயத்தில், அளப்பரிய செயல்களின் மூலம், தடம் பதிக்க உதவும் மாபெரும் சக்தியாக இருக்கிறது.ஆரோக்கிய எண்ணங்களை கொண்டவர்கள் என்றுமே வாழ்க்கையில் தோல்வியை தழுவியதில்லை. என்னால் முடியும்... என்னால் எப்போதும் முடியும் என்று முழக்கமிடுவோர்கள் ஆரோக்கிய எண்ணத்திற்கான விதைகளை விதைத்து வண்ணமயமான வெற்றியை அறுவடை செய்ய முடியும்.
சிந்தனைசெய் மனமே : வாழ்க்கை வாழ்வதற்கே. அதை சிறப்பாக வாழ்வதற்கு நேற்று இல்லை; நாளை இல்லை, இன்று தான் முக்கியம். இன்று முதல் ஒவ்வொரு மனிதனும், ஆரோக்கிய எண்ணத்தின் பலனை அறிந்து கொண்டு, வாழ்க்கையை தனக்கும், குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்கும் விதமாக அமைத்துக் கொள்வதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வெற்றி பெற வேண்டும்.                                                 
                                       
 உலகின் மிகச் சிறந்த வைரம் நம்மிடம் தோன்றும் எண்ணங்களே.. எங்கு பார்த்தாலும் மனித 
மனங்களில் ஏதேதோ எண்ணங்கள்.. பார்க்கும் மனித முகங்கள் எல்லாம் சிந்தனை  வயப்பட்டதாகவே தோன்றுகிறது.இறுக்கமான மனிதர்களாகவும்,இயந்திர கதியான மனிதர்களாகவுமே தென்படுகின்றனர். எண்ணக் குவியல்களின் கலவைகளையும்,சிந்தனை ரேகைகளையும் கொண்ட மக்கள் கூட்டத்தைக் காணும் திசையெல்லாம் பார்க்க முடிகிறது. சக மனிதனைக் கண்டு மகிழும் உள்ளமோ,இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளுதலோ இல்லாமல்தனியொரு உலகில் சிந்தனைகளோடே பயணிக்கும் உலகமாக மாறி விட்டது.இதற்கெல்லாம் அடிப்படை யாதென்று சிந்தித்தால் அவரவர்க்கான தனிப்பட்டஎண்ணங்களே ஆகும்.எண்ண 
                                     
 ஓட்டங்கள் தவறாக இருக்கும் போது அங்கே வாழ்வியல் நெறிகளில் மாற்றம் ஏற்படுகிறது.மனித நடத்தை மாறுபாடுகளை மாற்றி அமைக்கும் வல்லமை எண்ணங் களுக்கே உண்டு என்பதை மறுப்பதிற்கில்லை.
கண்ணதாசன் சொன்னது : பூமியில் இருப்பதும், வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே!'இருக்குமிடம் எதுவோ நினைக்குமிடம் பெரிதுபோய் வரும் உயரமும் புதுப் புது உலகமும் அவரவர் உள்ளங்களே...' இப்படி கண்ணதாசன் எண்ணங்களின் மேன்மை பற்றி அழகுற சொல்லி இருக்கிறார்.
நமது எண்ணங்களே நம்மை உருவாக்குகின்றன. இந்த எண்ணங்கள் நமக்கானதாக மட்டுமே இல்லாமல் பிறரைச் சார்ந்தும் அமைகிறது.கிராமங்களில் ஒரு பழமொழி சொல்லப்படுவதுண்டு.'வெட்கத்திற்கு அஞ்சி எருமை மாட்டை சாக கொடுத்தானாம்' என்று.  
பிறரின் எண்ணங்களுக்காகவே பயந்து வாழும் மனிதர்கள் ஒரு வகை. அடுத்தவர் முன் தன் மேதாவித் தனத்தைக் காட்டும் மனிதர்கள் மற்றோர் வகை. ஆக இவை எல்லாவற்றிலும் அடங்கியிருப்பது எண்ணங்களே! எண்ணிய முடிதல் வேண்டுமென ஆசைப் பட்ட பாரதியே அடுத்த வரியாக நினைவு நல்லது வேண்டும் என்கிறான். நினைவுகள் நல்லதாக இருப்பின் நெருங்கிய பொருள் கைப்படுவது பாரதியின் பார்வையில் சாத்தியமே.எத்தனை கோடி இன்பம் வைத்தாய் என்று மகிழ்ந்து பாடிய பாரதி வறுமையில் இருந்த கவிஞன் தான். இவ்வாறு எண்ணியவன் நிரந்தரமாக உறங்கி விட்டான்.அவன் விதைத்த எண்ணங்கள் இன்றும் உறங்கவில்லை. வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம் என்றும்,கல்வியால் பாரினை உயர்த்திட வேண்டும் என எண்ணிய பாரதியின் எண்ணங்கள் பிறர் நலன் சார்ந்தது. பிறர் நலன் நோக்கிய பாரதி தன் எண்ணங்களாலேயே இன்றும் நம்மிடையே வாழ்கிறான்.
எண்ணிய எண்ணியாங்கு : எண்ணங்களே செயலைத் தீர்மானிக்கின்றன. எண்ணங்களுக்கு வலிமை உண்டு. அதனால் தான் எண்ணம் போல வாழ்வு என்றும், எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் என்பதும் இந்த பிரபஞ்ச வாழ்வில் வலிமை வாய்ந்த வார்த்தைகளாகவே கூறப்பட்டு வருகிறது. ஆனால் இந்த எண்ணங்களை நாம் எப்படி கை
யாளுகிறோம் என்பதிலேயே வாழ்வின் சூட்சுமம் அடங்கி உள்ளது. உள்ளத்தனையது உயர்வாக வேண்டுமெனில் உயர்ந்த எண்ணங் களை எண்ண வேண்டும். பூ கொடுக்க வரும் பெண்மணியிடம் 'பூ வேண்டாம்' என்று சொல்வதை விரும்ப மாட்டார். 'நாளை வாங்கி கொள்கிறேன்' என்று சொல்ல வேண்டும். இதுவே நேர்மறைஎண்ணம்.என்னால் முடியாது என்று 
எண்ணும் எண்ணம் எதிர்மறையான எண்ணமாக உருமாற்றமடைகிறது.பெரும்பாலான மனிதர்களிடம் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துவதும் இத்தகைய எதிர் மறை எண்ணங்களே. இத்தகைய எதிர் மறையாளர்களிடம் பழகும் போது, நமக்கும் அத்தகைய எண்ணங்கள் நம்மை அறியாமல் புகுந்து விடுகிறது. இது தான் எண்ணங்களின் வலிமை. உன் நண்பன் யாரென்று சொல்! நீ யாரென்று சொல்கிறேன் என்ற பழமொழியின் பின் புலம் இது தான். சிறு வயதில் நாம்
அனைவருமே கேட்ட விஷயம் ஒன்றை இங்கே நினைவு கூறலாம்.நம்மைச் சுற்றி கண்ணுக்குத்தெரியாத தேவதைகள் இருக்கின்றனவாம். அந்த தேவதைகள் நாம் என்ன கூறுகிறோமோ அதற்குஅப்படியே ஆகட்டும் என்று திரும்ப கூறுமாம். ஆகவே தான் நல்லதையே நினைக்க வேண்டும் என்பதாக பாட்டிகள் நம் வீட்டில் அடிக்கடி கூறுவதுண்டு. விக்கலிற்கான அறிவியல் பூர்வ காரணங்கள்கூறப்பட்ட போதிலும், யாரோ நினைக்காங்க போல... என்று கூறுவதும் எண்ணங்களே.
எண்ண அலைகள் : வோரா எனப்படும் அதிர்வலைகள் நம்மைச் சுற்றி நிறைந்து இருப்பதாகவும், அத்தகைய அலைகள் நேர்மறை மனிதர்கள் இருக்கும் இடங்களில் அதிகம் இருப்பதாக ஆய்வறிக்கை கூறுகிறது. நல்லா இருக்கீங்களா...என்ற கேள்வியின் எதிர் வினை பதிலை வைத்து 
மனிதர்களை இனங் காணலாம். நல்லா இருக்கேன் என்ற பதில் தருபவர்கள் நேர்மறை எண்ணங்களை உடையவர்களாகவும், ஏதோ இருக்கேன் என்ற பதிலை உடையவர்கள் எதிர் மறை எண்ணங்களை கொண்டவர் களாகவும் அறிந்து கொள்ளலாம்.
துஷ்டனைக் கண்டால் துார விலகு என்பதும் இதனால் தான். உனக்குள்ளே எல்லா ஆற்றல்களும் அடங்கியுள்ளது. நீ உன்னை வலிமை வாய்ந்தவன் என்று எண்ணினால் வலிமை படைத்த வனாகவே ஆகிறாய். இது வீரத் துறவியின் வார்த்தைகள். மனிதனின் எண்ணம் நம்பிக்கையாக வேர் விடும் போது அசாதரண சக்தி பெறுகிறது. வேடிக்கைக் கதை ஒன்று உண்டு. ஆரோக்கியமான உடலும் உற்சாக குணமும் நிறைந்த ஒருவன் வீட்டை விட்டு வெளியே கிளம்புகிறான்.அப்போது அவனுக்கே தெரியாமல் முன்பே பேசி வைத்து கொண்ட அவனின் நண்பர்கள் அவனை சந்திக்கின்றனர். ஒரு நண்பன் அவன் அருகில் வந்து என்னடா ஒரு மாதிரி இருக்கே என்று கேட் கிறான். இது போலவே மற்றொரு நண்பனும் உடம்பு சரியில்லையா, டல்லா இருக்கிற என்கிறான். இவ்வாறு வழி நெடுக பார்க்கும் நண்பர்கள் எல்லாம் கேட்கும் எதிர் மறை கேள்விகளால் சிக்குண்ட அவன் ஒரு கட்டத்தில் அதை உண்மையாகவே எண்ணத் தொடங்கி நோய் வாய்ப்பாட்டு படுத்து விடுகிறான். இப்படியான மனிதர்கள் நம்மைச் சுற்றி இருக்கலாம். அத்தகைய குணம் கொண்ட மனிதர்களிடமிருந்து தள்ளி இருக்க வேண்டும். மனதின் எண்ணங்களைப் பலவீனமடையச் செய்யும் சக்திகளின் வலைகளை அறுத்தெறிய வேண்டும். அரசவையில் விகட கவிகளின் மூலம் மன அழுத்தம் வராமல் பார்த்துக் கொண்ட அரசர்கள் போல நம் வாழ்வின் மனக் கவலையை மாற்றலாக்கும் மனிதர்களையே நட்புக் கரத்திற்குள் வைத்துக் கொள்வோம். அவர்களே வழியும், ஒளியுமானவர்கள்.
நேர்மறை எண்ணங்கள் : ஒவ்வொரு நாளும் துாங்கச் செல்வதற்கு முன் அன்றைய நாளில் நடந்த நல்லவற்றை பட்டியலிடுங்கள். நான் எல்லா வகையிலும் முன்னை விட சிறந்து வருவதை உணர்கிறேன் என்று மனதிற்குள் கூறிக் கொள்ளும் போது அந்த எண்ணங்கள் வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்துவதை உணர முடியும். அதே போன்றே இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்னும் எண்ணத்தை மனதில் ஏற்றிக் கொண்டு இந்த நாள் என்  வெற்றிக்கான  நாளாகும் என்ற நல்ல சிந்தனையை மனதில் உருவேற்றிக் கொள்ள வேண்டும். நம்மைத் தவிர நம்மை யாரும் பிரசவித்துக் கொள்ள முடியாது. எனவே தான் நமக்கான நல்ல எண்ணங்களை நாமே தான் உருவாக்கிட வேண்டும். நம்மை ஊக்கப்படுத்தி முன்னேற்றுபவை நம்மிடம் உள்ள எண்ணங்களே. ஆக்கப் பூர்வமான எண்ணங்களை அதிகப்படுத்துதலே வெற்றிக்கான வழியாகும். எதை நம் ஆழ் மனம் எண்ணுகிறதோ அதையே நம் செயல்களும் பிரதிபலிக்கின்றன. சபாஷ் நல்லா பண்ற, அசத்தல், பிரமாதம், ஆகா அருமை..இது போன்ற வார்த்தைகள் 
எல்லாம் மற்றவர்களிடமிருந்து வர வேண்டும் என்று எதிர் பார்க்காமல் நம்மிடமிருந்து நமக்காகவர வேண்டும். அகத்தில் தேவையற்ற குப்பைகளைத் தவிர்த்தாலே முகத்தில் புன்னகை வந்து விடும். ஒவ்வொரு நாளும் நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாகத் தான் இருக்கிறோம். அப்படியானால் நம் எண்ணங்களும் அதைப் பற்றியதாகவே இருக்க வேண்டும். நம் இலக்குகளைப் பற்றிய எண்ணங்களை சுற்றி சுற்றி ஓட விடுங்கள். எண்ணங்களுக்கு ஆதரவாய் இருப்பது அடுத்தவர்கள் அல்ல.. ஆழ்மனம் தான். நல்ல எண்ணங்களை உற்பத்தி செய்து அதை இயக்கும் இயக்குநராக மனதைப் பழக்கப்படுத்தும் போது அது வழக்கமாகவே மாறி விடும்.
            
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo