Onetamil News Logo

குட்ஷெப்பர்ட் மாடல் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா ; ஸ்காட் கல்விக் குழும மேலாண் இயக்குநரின் துணைவியார் அகஸ்டி பிரியதர்ஷினி பங்கேற்பு 

Onetamil News
 

குட்ஷெப்பர்ட் மாடல் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா ; ஸ்காட் கல்விக் குழும மேலாண் இயக்குநரின் துணைவியார் அகஸ்டி பிரியதர்ஷினி பங்கேற்பு   


தூத்துக்குடி 2018 டிசம்பர் 7;தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளத்தில் அமைந்துள்ள ஸ்காட் கல்விக் குழுமத்தின் ஒரு அங்கமான குட்ஷெப்பர்ட் மாடல் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு வருகை புரிந்தோரை பள்ளியின் மாணவர் தலைவன் ஜோசுவா வரவேற்றான். விழாவிற்கு ஸ்காட் கல்விக் குழுமத்தின் பொதுமேலாளர்(நிதித்துறை) இக்னேஷியஸ் சேவியர் மற்றும் ஸ்காட் கல்விக் குழும மேலாண் இயக்குநரின் துணைவியார் அகஸ்டி பிரியதர்ஷினி ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.                                                                                                           
 பள்ளியின் முதல்வர் ஜு.பத்மினிவள்ளி முன்னிலை வகித்தார்.. சிறப்பு விருந்தினராக அருட்தந்தை ரோலிங்டன் கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் நற்செய்தி வழங்கினார்கள்.அத்துடன் ஸ்டேட் பாங்க் காலணி பங்குத்தந்தை ஜெரோசின் ஏ கட்டர் மற்றும் வாகைக்குளம் மதர்தெரசா பொறியியல் கல்லூரி துணைமுதல்வர் ஜார்ஜ் கிளின்டன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் ஏசுவின் பிறப்பு குறித்த வரலாற்று நாடகம் அரங்கேற்றப்பட்டது அத்துடன் மாணவ மாணவியரின் கண்கவர் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. முடிவில் மாணவி திவ்ய தர்சினி நன்றியுரை கூறினார். விழாவிற்கான  ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர் ஜு.பத்மினிவள்ளி ஆலோசனையின் படி ஆசிரியர் ஆசிரியைகள் செய்து இருந்தனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo