Onetamil News Logo

கருணை அடிப்படையில் 2 பேருக்கு அங்கன்வாடி உதவியாளர் பணிக்கான ஆணை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் ஒரு பயனாளிக்கு ரூ.6,000/- மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள் உட்பட நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்

Onetamil News
 

கருணை அடிப்படையில் 2 பேருக்கு அங்கன்வாடி உதவியாளர் பணிக்கான ஆணை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் ஒரு பயனாளிக்கு ரூ.6,000/- மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள் உட்பட நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.


 தூத்துக்குடி, 2019 ஜூன் 10:  தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் கருணை அடிப்படையில் 2 பேருக்கு அங்கன்வாடி உதவியாளர் பணிக்கான ஆணை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் ஒரு பயனாளிக்கு ரூ.6,000/- மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள் மற்றும் சவுதி அரேபியா நாட்டில் காலமான கோவில்பட்டியை சேர்ந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.1,08,045/-க்கான நிவாரண உதவிக்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும்  கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தலைமையில் இன்று (10.06.2019) நடைபெற்றது.
    இக்கூட்டத்தில்;;, மாவட்ட ஆட்சித்தலைவர் , முதியோர் உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, பட்டா பெயர் மாற்றம், கல்விக்கடன், தொழிற்கடன் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வேண்டிய கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை, பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்டார். மேலும், மனுக்கள்; மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், மாற்றுத்திறனாளிகளின் இருப்பிடங்களுக்கு சென்று கோரிக்கை மனுக்கனை பெற்றுக்கொண்டார். பின்னர், கோவில்பட்டி வட்டம், வெங்கடாசலபுரம் உழவர் உற்பத்தியாளர் குழுவின், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடலைப்பருப்பு, குதிரைவாலி உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனையை தொடங்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் கயத்தார் வட்டத்தை சேர்ந்த திருமதி.பூல்தாய் என்பவருக்கும், விளாத்திகுளம் வட்டத்தை சேர்ந்த திருமதி.செ.மங்களேஸ்வரி என்பவருக்கும் கருணை அடிப்படையில் அங்கன்வாடி உதவியாளருக்கான பணி நியமன ஆணையினையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் திருச்செந்தூர் அடைக்கலாபுரத்தை சேர்ந்த திரு.வின்சென்ட் என்பவருக்கு ரூ.6,000ஃ- மதிப்புள்ள மூன்று சக்கர சைக்கிளையும், கோவில்பட்டி நகரத்தை சேர்ந்த திரு.ஆ.பிரபாகரராஜ் என்பவர் சவுதி அரேபியா நாட்டில் காலமான வகைக்கு, இழப்பீட்டுத்தொகை ரூ.1,08,045ஃ-க்கான காசோலையினை அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோரிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரான் ஜீத் சிங் கலோன், ., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சங்கரநாராயணன், இணை இயக்குநர் (வேளாண்மை) மகாதேவன், துணை ஆட்சியர்கள் (பயிற்சி) முத்துமாதவன், சத்யா, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பாலசுப்பிரமணியன், மாவட்ட ஊட்டச்சத்து திட்ட அலுவலர் முத்துலட்சுமி, மாற்றுதிறனாளிகள் நல அலுவலர் ஜெயசீலி,  கோவில்பட்டி வட்டம், வெங்கடாசலபுரம் உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் ராஜாராம், செயலாளர் ரெங்கராஜ், பொருளாளர் வெங்கடசாமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo