Onetamil News Logo

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ / மாணவியர்கள் பள்ளி விடுதி, ஐடிஐ விடுதியில் சேர விண்ணப்பிக்க அறிவிப்பு

Onetamil News
 

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ / மாணவியர்கள் பள்ளி விடுதி, ஐடிஐ விடுதியில் சேர விண்ணப்பிக்க அறிவிப்பு   


தூத்துக்குடி  2019 ஜூன் 11 ;தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ / மாணவியர்கள் பள்ளி விடுதி, ஐடிஐ விடுதியில் சேர  20.06.2019க்குள்ளும் , கல்லூரி விடுதிகளில் சேர 04.07.2019 க்குள் சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர் / காப்பாளினியிடம் அல்லது மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் - மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது....தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ / மாணவியர்களுக்கென கீழ்க்கண்டவாறு மொத்தம் 55 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
--------
வ.எண்    விடுதியின் விவரம்    மாணவர்களுக்கானது    மாணவியர்களுக்கானது
1    பள்ளி விடுதி    27    24
2    கல்லூரி விடுதி    2    1
3    ஐடிஐ விடுதி    1    -
பள்ளி விடுதிகளில் 4 முதல் 12 ம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவ / மாணவியர்களும் கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு பயிலும் மாணவ / மாணவியர் சேரத் தகுதியுடையவர்கள் ஆவர்.  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் அனைத்து வகுப்பைச் சார்ந்த மாணவ / மாணவியர்களும் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர். விடுதிகளில் பின்வரும் எவ்வித செலவினமும் இல்லாமல் சலுகைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. அனைத்து விடுதி மாணவ /மாணவியர்களுக்கும் உணவும் தங்கும் வசதியும் அளிக்கப்படும். 10 ம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியருக்கு சீருடைகள் வழங்கப்படும். 10 ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியருக்கு சிறப்பு வழிகாட்டி (ம) வினா வங்கிகள் 2,50.000/க்கு மிகாமல் இருக்க வேண்டும். விடுதிக்கும் சம்பந்தப்பட்ட மாணவ / மாணவியர்கள் வசிக்கும் இடத்திற்கும் 5 கி.மீ தூரம் இருத்தல் வேண்டும்.இது மாணவிகளுக்கு பொருந்தாது. தகுதியுடைய மாணவ / மாணவியர் விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர் / காப்பாளினியிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பள்ளி விடுதி மற்றும் ஐடிஐ விடுதிகளைப் பொறுத்தவரை தொடர்புடைய விடுதி காப்பாளர் , காப்பாளினியிடம் அல்லது மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் 20.06.2019க்குள்ளும் , கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர் / காப்பாளினியிடம் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் 04.07.2019 க்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும். மாணவ ஃ மாணவியர் விண்ணப்பிக்கும்போது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் யாதும் அளிக்கத்தேவையில்லை.விடுதியில் சேரும்போது மட்டும் இச்சான்றிதழ்களை அளித்தால் போதுமானது.  தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம்வாழ் இலங்கைத்தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே மாணவ / மாணவியர் அரசின் இச்சலுகைகளை பெற்று பயனடையுமாறும் மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் உள்ள  மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, கேட்டுக்கொண்டுள்ளார்.  
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo