Onetamil News Logo

31வது தேசிய சாலை பாதுகாப்பு வார விழா;போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட எஸ்.பி. அருண்பாலகோபாலன், பரிசு வழங்கினார். 

Onetamil News
 

31வது தேசிய சாலை பாதுகாப்பு வார விழா;போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட எஸ்.பி. அருண்பாலகோபாலன், பரிசு வழங்கினார். 


தூத்துக்குடி, 2020 ஜன.25:தூத்துக்குடியில் 31வது தேசிய சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வினாடி, வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்பாலகோபாலன், பரிசு வழங்கினார். 
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக மோட்டார் வாகனச்சட்டம், சாலை பாதுகாப்பு விதிகள், சாலை விபத்துக்கள் குறித்த புள்ளியியல் விபரங்கள் மற்றும் சாலை விபத்துக்களை தவிர்ப்பது போன்றவற்றில் உள்ள மாணவ, மாணவியருக்கு எந்தளவு விழிப்புணர்வு உள்ளது என்றும், இதன் மூலம் மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. 
 தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 13 பள்ளிகளிலிருந்து 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியர்கள் ஒரு குழுவிற்கு 2 பேர் வீதம் ஒரு பள்ளிக்கு 5 குழுக்களாக வினாடி, வினா போட்டியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். 
முதலில் இவர்களுக்கு முதற்கட்ட தேர்வு நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்ற 12 பேர்கள் கொண்ட 6 குழுக்கள் இறுதி கட்ட போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். 
பின் மேற்படி 6 குழுக்களுக்கிடையே நடந்த இறுதி கட்ட வினாடி, வினா போட்டியில் தூத்துக்குடி பி.எம்.சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் அபரிசன், ஜெமில்டன் அடங்கிய குழுவினர் முதலிடத்தையும், அதே பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் ஜெயவர்ஷினி, ஸ்ரீமதி அடங்கிய மாணவிகள் இரண்டாவது இடத்தையும், அதே பள்ளியைச் சேர்ந்த பென்னட் ஜெபர்சன், டென்னிஸ் ஐசக் பால் ஆகிய மாணவர்கள் அடங்கிய குழுவினர் மூன்றாவது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், பரிசு வழங்கினார். 
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி  வ.உ.சி கல்வியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் கனகராஜ், நிலமோசடி தடுப்பு பிரிவு டி.எஸ்.பி பிரதாபன், மத்தியபாகம் காவல் ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ், காவல்துறையினர், பள்ளி மாணவ, மாணவிகள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் கலந்து கொண்டனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo