Onetamil News Logo

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் வரும் 20ம் தேதி அன்று முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்கள் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் - கலெக்டர்  சந்தீப் நந்தூரி  தகவல் 

Onetamil News
 

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் வரும் 20ம் தேதி அன்று முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்கள் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் - கலெக்டர்  சந்தீப் நந்தூரி  தகவல் 


                                                                                                                                   
தூத்துக்குடி  2019 பிப்ரவரி 8 ;தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 20-02-2019  அன்று முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்கள் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் கூட்டம்; - மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி  தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது...முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்கள் சார்ந்தோருக்கான  சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் 20-02-2019  அன்று காலை 11.30 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள  சிப்பிக்கூடத்தில்  நடைபெறவுள்ளது.  தங்கள் மனுவின் இரட்டை பிரதிகளுடன் அசல் மற்றும் நகல், படைவீரர் சான்று மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றுடன் வர வேண்டும். தற்போது கணினி மூலம் மனுவின் மீது நடவடிக்கை மேற்கொள்வதால் முன்னாள் படைவீரர் எண், தகுதி, பெயர், தகப்பனார் பெயர், முகவரி, தொலைபேசி எண் ஆகியவைகள் மனுவில் கண்டிப்பாக குறிப்பிடப்பட்டு இருக்க வேண்டும். இதில் தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த படைவீரர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர்  சந்தீப் நந்தூரி கேட்டுக் கொள்கிறார்.
மேலும் விவரங்களுக்கு உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நலன், தூத்துக்குடி, அவர்களை நேரில் தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo