Onetamil News Logo

தூத்துக்குடி அருகே செக்காரக்குடியில் கழிவுநீரை அகற்றிய பொழுது கழவுநீர் தொட்டிக்குள் விழுந்து நான்கு பேர் உயிரிழப்பு

Onetamil News
 

தூத்துக்குடி அருகே செக்காரக்குடியில் கழிவுநீரை அகற்றிய பொழுது கழவுநீர் தொட்டிக்குள் விழுந்து நான்கு பேர் உயிரிழப்பு


 
தூத்துக்குடி 2020 ஜூலை 2 ;தூத்துக்குடி அருகே செக்காரக்குடியில் கழிவுநீரை அகற்றிய பொழுது கழவுநீர் தொட்டிக்குள் விழுந்து நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். 
தூத்துக்குடி மாவட்டம் ,ஸ்ரீவைகுண்டம் தாலுகாவுக்கு உட்பட்ட செக்காரக்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது வீட்டில் கழிவுநீர் தொட்டியில் கழிவுநீரை அகற்றுவதற்காக நெல்லை மாவட்டம் வீரவநல்லூரைச் சேர்ந்த இக்கிராஜா (17), பாலா (20), பாண்டி (28), ஆலங்குளத்தை சேர்ந்த தினேஷ் (20) ஆகிய 4 பேர் வேலைக்கு சென்றுள்ளனர்.
கழிவுநீரை அகற்றுவதற்காக முதலில் 2 பேர் தொட்டியில் இறங்கி நீரை அகற்றியுள்ளனர். அப்பொழுது அவர்கள் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் அவர்களை கூப்பிட்டுக்கொண்டு மற்ற  2 பேர் தொட்டியில் இறங்கியுள்ளனர். அப்பொழுது 4 பேரும் நீண்ட நேரமாக மேலே வராததால் தொட்டியில் எட்டிப் பார்த்த பொழுது  4 பேரும் மூச்சு திணறி இறந்து கிடந்துள்ளனர்.இது குறித்து தகவல் அறிந்ததும் புதுக்கோட்டை போலீசார், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo