Onetamil News Logo

தூத்துக்குடியில் ராஜலட்சுமி கல்வி குழுமம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் ;  அமைச்சர், கலெக்டர்,எம்.எல்.ஏ பங்கேற்பு 

Onetamil News
 

தூத்துக்குடியில் ராஜலட்சுமி கல்வி குழுமம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் ;அமைச்சர், கலெக்டர், எம்.எல்.ஏ பங்கேற்பு       


தூத்துக்குடி 2020 பிப்ரவரி 23 ;தூத்துக்குடி மாநகராட்சி அண்ணாநகர் பகுதியில் சிறப்பு மருத்துவ முகாமினை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ  துவக்கி வைத்து கண் குறைபாடு கண்டறியப்பட்டவர்களுக்கு கண் கண்ணாடிகளை வழங்கினார்
தூத்துக்குடி மாநகராட்சி அண்ணாநகர் தங்கம்மாள் நடுநிலைப்பள்ளியில் ராஜலட்சுமி கல்வி குழுமத்தின் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் இன்று (23.02.2020) நடைபெற்றது. இம்மருத்துவ முகாமில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ  கலந்துகொண்டு முகாமினை துவக்கி வைத்து கண் குறைபாடு கண்டறியப்பட்டவர்களுக்கு கண் கண்ணாடிகளை வழங்கினார். மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,  திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன்,  ராஜலட்சுமி கல்வி குழும சேர்மன் ஆறுமுகநயினார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
முகாமில்  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசியதாவது:
 புரட்சித்தலைவி அம்மா  தமிழக மக்கள் அனைத்து நிலைகளிலும் சிறப்பாக வாழ வேண்டும், குறிப்பாக கல்வி பயிலும் மாணவ, மாணவியர்கள் எந்த வகையிலும் சிரமப்படக்கூடாது என்பதற்காக பல திட்டங்களை செயல்படுத்தினார்கள். தமிழகத்தை முதன்மை மாநிலமாகவும், முன் மாதிரியான மாநிலமாகவும் மாற்றிக்காட்டினார்கள்.  புரட்சித்தலைவி அம்மா  தமது பிறந்தநாளில் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் மரக்கன்றுகள் நடுதல், ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் அடிப்படை தேவைகைளை நிறைவேற்றுகின்ற விழாவாகவே நடத்தி வந்தார்கள். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசு அவர்களின் திட்டங்களை அப்படியே தொடர்ந்து நடத்தி வருகிறது. தமிழக அரசின் சார்பிலும்,  முதலமைச்சர் அவர்களின் சிறப்பு மருத்துவ முகாம் திட்டத்தின்கீழ் அதிக அளவிலான மருத்துவ முகாம்கள் கிராமப்புற பகுதிகளில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாநகராட்சி அண்ணாநகர் பகுதியில் ராஜலட்சுமி கல்வி குழுமத்தின் சார்பில் இலவச கண் சிகிச்சை மற்றும் பல்வேறுவிதமான நோய்களுக்கான மருத்துவ முகாமாகவும் நடத்தப்பட்டு இப்பகுதி மக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனையும், கண் சிகிச்சை முகாமாகவும் நடத்துவது மகிழ்ச்சிக்குரியது. இப்பகுதி மக்கள் இம்முகாமினை பயன்படுத்தி மருத்துவ பரிசோதனைகளை செய்து நோயற்ற வாழ்வை பெற வேண்டும் என பேசினார்.
முகாமில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன்,  மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் வக்கீல் செல்வகுமார், முக்கிய பிரமுகர்கள் ஏசாதுரை, செரினா பாக்யராஜ், குருதாய் விண்ணரசி, ராமகிருஷ்ணன், விக்னேஷ், சரவணவேல், தங்கசெல்வம், சுடலைமணி, ஆறுமுகம், ராஜலட்சுமி கல்வி குழும முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo