தூத்துக்குடியில் Dream Kitchen Cafe able உணவகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, திறந்து வைத்தார்.
தூத்துக்குடி 2019 ஜூலை 8 ;தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத்தை பெருக்கும் Dream Kitchen Cafe able உணவகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு நிறுவன சமுக பொறுப்பு நிதி ரூ.29.47 லட்சம் மதிப்பில் அழகிய பூங்காவுடன் கட்டப்பட்டுள்ள Dream Kitchen Cafe able உணவகத்தினையும் மற்றும் காபி சாப் திறப்பு விழா இன்று (08.07.2019) நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, கலந்துகொண்டு, Dream Kitchen Cafe able உணவகத்தினை திறந்து வைத்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் பல்வேறு பயிற்சிகள் மற்றும் கடன் உதவி வழங்கப்படுகிறது. இலவச பேருந்து அட்டை, உதவி உபகரணங்கள் உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் Dream Kitchen Cafe able உணவகம் மற்றும் பேக்கரி பல்வேறு பல்வேறு நிறுவன சமுக பொறுப்பு நிதியில் கட்டப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்திற்கு தேவையான கட்டுமான பணிகள் மற்றும் பூங்கா அமைக்க ராம்கோ நிறுவனத்தின் மூலம் ரூ.6.00 லட்சம், உணவகம், கழிப்பறை, கிச்சன் கட்டுமானம், பேக்கறி அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு சவுத் கங்கா புராஜெக்ட் நிறுவனம் மூலம் ரூ.15.00 லட்சம், IOCL நிறுவனம் மூலம் ரூ.8.47 லட்சம் மதிப்பில் உணவக கிச்சனுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் கணிணி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மற்றும் மாற்றத்திறனாளிகளுக்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்பட்டது. இந்த உணவகத்தில் நெகிழிகளை பயன்படுத்தாமல் பாக்குமட்டை உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களையே பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்தில் 15 மாற்றுத்திறனாளிகள் பணிபுரிய உள்ளார்கள். மாற்றுத்திறனாளிகள் வசம் இந்த உணவகம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாற்றுதிறனாளிகள் வாழ்வாதாரம் உயரும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் அலுவலர்கள், பொதுமக்கள் இந்த உணவகத்தை பயன்படுத்தி மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து அம்மா இருசக்கர வாகன திட்டத்தின்கீழ், 15 மாற்றுத்திறனாளிகளுக்கு ஆந்திரா வங்கி சமுக பொறுப்பு நிதி ரூ.3.72 லட்சம் மற்றம் அரசு மானியம் ரூ.4.69 இலட்சம் என மொத்தம் ரூ.8.40 லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் மு.வீரப்பன், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரான் ஜீத் சிங் கலோன், ., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) ரேவதி, ராம்கோ நிறுவன மூத்த தலைவர் (உற்பத்தி) ராமலிங்கம், பொது மேலாளர் (சுரங்கம்) ஜெகதீஸ்பாபு, மூத்த பொது மேலாளர் (நிர்வாகம்) மணிகண்டன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.