Onetamil News Logo

தூத்துக்குடியில் பெருகும் கஞ்சா போதையால் கப்பல் இஞ்சினியர் உட்பட இரட்டைக்கொலை ;பரிதாபம்

Onetamil News
 

தூத்துக்குடியில் பெருகும் கஞ்சா போதையால் கப்பல் இஞ்சினியர் உட்பட இரட்டைக்கொலை ;பரிதாபம்   


 தூத்துக்குடி 2019 செப் 15 ;தூத்துக்குடியில் பெருகும் கஞ்சா போதையால் கப்பல் இஞ்சினியர் உட்பட இரண்டு பேர் வெட்டிகொலைசெய்யப்பட்டனர்.
தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் உள்ள சிவந்தாக்குளம் 2ம் தெருவில்  பிள்ளையார் கோவில் அருகே தங்கப்பூ இவரது மகன் முகேஷ் என்ற முருகேசன் (40). இவர் கப்பல் இஞ்சினியர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி இவர் டெல்லி கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலை செய்து வருகிறார். அவரது பெயர் இந்திரகுமாரி. ஆனால் இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. முகேஷ் என்ற முருகேசன் (40) கப்பலில் இருந்து விடுமுறைக்கு தூத்துக்குடிக்கு வீட்டுக்கு கடந்த 2மாதங்களுக்கு முன்பு தான் வந்துள்ளார் .இவரது நண்பர், தூத்துக்குடி பிரையண்ட் நகர் 13 வது தெருவைச் சேர்ந்த பிச்சைக்கனி இவரது மகன் விவேக் (42).இவர் தனியார் ஷிப்பிங் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் திருமணமாகி குழந்தைகள் இல்லை. இரண்டு பேரும் இன்று பிற்பகலில் வந்தாக்குளம் 2ம் தெருவில்  பிள்ளையார் கோவில் அருகே இரண்டு இளைஞர்கள் அவர்கள் வீடு அருகே பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது  அந்த வழியாக பைக்கில் வந்த லெவிஞ்சிபுரத்தைச் சேர்ந்த மணிகன்டன் என்பவர் வேகமாக சென்றதைப் பார்த்து முருகேசன், மெதுவாக பைக் யில் போகுமாறு கூறியுள்ளார்.ஆனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு   உள்ளவர்கள் சமாதானம் பேசி மணிகன்டனை அனுப்பி வைத்துள்ளனர். 
ஆனால் ஆத்திரம் அடைந்த மணிகன்டன் அவரது நண்பர்களிடம் விவரத்தை கூறி முருகேசனை கொலை செய்வதற்கு   8 பேர் கொண்ட கும்பல் 4 பைக்குகளில் வந்து வெட்டி விட்டு தப்பிச்சென்றனர். இந்த நிகழ்வு தூத்துக்குடியில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்போது . இதனை தடுக்க  செய்த அவரது நண்பர் விவேக்கையும்  அரிவாளால் வெட்டி விட்டு தப்பினார்கள்.  இதில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் தூத்துக்குடி பிரையண்ட் நகர் 9 வது தெருவை சேர்ந்தவர் விவேக் ( 38), சிவந்தாகுளம் 2ம் தெருவைச்  சேர்ந்த முருகேசன் ( 38) ஆகியோர் இறந்துவிட்டனர். 
இதுகுறித்து தூத்துக்குடி எஸ்.பி.அருண் பால கோபாலன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு போலீசாரை குற்றவாளிகளை பிடிக்க முடுக்கிவிட்டுள்ளார்.போலீசார்  விசாரித்து வருகின்றனர்.    தூத்துக்குடியில் கப்பல் இஞ்சினியர் உட்பட 2பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி  கண்காணிப்பாளர் பிரகாஷ் , இன்ஸ்பெக்டர்கள் ஜீன்குமார், ஜெயப்பிரகாஷ், தங்ககிருஷ்ணன், சப் இன்ஸ்பெக்டர்கள் சங்கர், ஊர்க்காவலபெருமாள் உட்பட போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கஞ்சா தாராளமாக விற்பனை செய்யப்படுகிறது.இதனால் போதையில் பல கொலைகள் நடந்துவருகின்றன.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo