Onetamil News Logo

தூத்துக்குடி புறநகரில் ஒருங்கினைந்த பேருந்து நிலையம் முதலமைச்சர் நடவடிக்கை ;மாநகராட்சிக்கு பரிந்துரை

Onetamil News
 

தூத்துக்குடி புறநகரில் ஒருங்கினைந்த பேருந்து நிலையம் முதலமைச்சர் நடவடிக்கை ;மாநகராட்சிக்கு பரிந்துரை


தூத்துக்குடி 2019 ஆகஸ்ட் 10 ;தூத்துக்குடியில் ஒருங்கினைந்த பேருந்து நிலையம் அமைக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து மாநகராட்சிக்கு பரிந்துரை செய்தார்.
தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளரும், சமூக ஆர்வலருமான சத்யா இலட்சுமணன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமியை சென்னையில் நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார்.
அந்த மனுவில் மறைந்த தமிழக முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி எதிரே உள்ள 25 ஏக்கர் நிலப்பரப்பில் தூத்துக்குடி ஒருங்கினைந்த பேருந்து நிலையம் அமைய நடவடிக்கை எடுத்து அரசு ஆணை பிறப்பித்தார்கள்.
முன்னாள் சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் எம்.எல். ஏ. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தூத்துக்குடி ஒருங்கினைந்த நிலைய பணிகளை துரிதபடுத்தி ஆய்வு பணிகளை செய்தனர்
தனியார் நிறுவனம் ஒருங்கினைந்த ஆய்வு பணி அறிக்கையை சென்னை நகராட்சி நிர்வாக இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைத்தது.
 இந்நிலையில் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தை ஸ்மார்ட் சிட்டி நிதியில் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுத்து, ஒருங்கினைந்த பேருந்து நிலைய திட்டத்தை கிடப்பில் போட்டது.
தூத்துக்குடி பாளை ரோடு போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகும். இந்த இடத்தில் தான் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் உள்ளது. இந்த பகுதியில் தான் அனைத்து கட்சிகளும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதால் பயணிகள் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் 1.36 ஏக்கரும், அரசு டிப்போ 1.50 ஏக்கரும் சேர்த்து மொத்தம் 2.86 ஏக்கர் உள்ளது. இந்த நிலப்பரப்பில் 1296 தடவை பேருந்துகள் வந்து செல்லும் இதனால் போக்குவரத்து இடையூறு பாளை ரோட்டில் அடிக்கடி ஏற்படுவதோடு, பயணி, பொதுமக்கள் உயிர் இழப்பு ஏற்படுகிறது.
ஸ்மார்ட் சிட்டி நிதியில் விரிவாக்கம் செய்ய 53 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2.86 ஏக்கர் நிலப்பரப்பில் தூத்துக்குடி பழைய பேருந்து நிலைய விரிவாக்கம் செய்ய ஒதுக்கீடு செய்யும் 53 கோடி ரூபாயை தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி எதிரே ஒருங்கினைத்த பேருந்து நிலையம் அமைக்க ஒதுக்கீடு செய்யப்பட்ட 25 ஏக்கரில் இந்த பேருந்து நிலையத்தை உருவாங்கள்.
அனைத்து பேருந்துகளும் புறவழிச்சாலை விழியாக செல்வதால் நகரில் போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்த முடியும்.
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தை தொடர்ந்து நகர பேருந்த நிலையமாக செயல்பட்டால் பயணிகள், பொதுமக்கள் வரவேற்பார்கள். அரசு டிப்போ வை மாற்ற வேண்டிய நிலைய ஏற்படாது. தொடர்ந்து செயல்படும். என தெரிவிக்கப்பட்டிருந்தது.
முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி அந்த மனுவை முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு அனுப்பி வைத்து தூத்துக்குடி மாநகராட்சிக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தார்.
முதலமைச்சர் தனிப்பிரிவு தூத்துக்குடி ஒருங்கினைந்த பேருந்து நிலையமனுவை தூத்துக்குடி மாநகராட்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டதை சமூக ஆர்வலர் சத்யா இலட்சுமணனுக்கு பதிலாக தெரிவித்தது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo