Onetamil News Logo

தூத்துக்குடி மாவட்டத்தில் 2020-2021-ஆம் ஆண்டில் மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தீவன அபிவிருத்தி திட்ட இனங்கள் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் செயல்படுத்தப்பட உள்ளது  மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தகவல் 

Onetamil News
 

தூத்துக்குடி மாவட்டத்தில் 2020-2021-ஆம் ஆண்டில் மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தீவன அபிவிருத்தி திட்ட இனங்கள் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் செயல்படுத்தப்பட உள்ளது  மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தகவல் 


தூத்துக்குடி 2020 ஆகஸ்ட் 14 ;தூத்துக்குடி மாவட்டத்தில் 2020-2021-ஆம் ஆண்டில் மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தீவன அபிவிருத்தி திட்ட இனங்கள் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் செயல்படுத்தப்பட உள்ளது  மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது அறிவிப்பு ;தூத்துக்குடி மாவட்டத்தில் 2020-2021-ஆம் ஆண்டில் மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கீழ்க்காணும் தீவன அபிவிருத்தி திட்ட இனங்கள் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. 
கால்நடை வளர்போரின் 120 ஏக்கர் இறைவை  நிலத்தில் 3வருடங்களுக்கான பசுந்தீவனம் சாகுபடி செய்வதற்கு பல்லாண்டு பசுந்தீவன பயிர்களான கோ-எப்.எஸ்-29  தீவனச்சோளம் மற்றும் வேலி மசால் விதைகள் மானியமாக வழங்கப்படும். விவசாயிகளின் நிலத்தடி நீர் இருப்பினை பொருத்து 25 சென்ட் முதல் 1 ஏக்கர் வரை மானியமாக தீவன விதைகள் பெற்றுக் கொள்ளலாம்.   
கால்நடைகளுக்கு  சரிவிகித சத்துக்கள் அடங்கிய பசுந்தீவனம் கிடைக்கும் வகையில் கோ-4 புல்கரணைகள் மற்றும் பல்வேறு வகை தீவனப்பயிர்களான தீவனச்சோளம், கோ.எப்.எஸ்.29 வகை தீவன மக்காச்சோளம், காராமணி, வேலிமசால், மற்றும் முருங்கை மர தீவன விதைகள் அடங்கிய தீவன விதைப்பைகள் மானியமாக 50 ஏக்கர் இறைவை  நிலத்தில் பயிரிட வழங்கப்படும்.  குறைந்த பட்சம் 10 சென்ட் முதல் 1 ஏக்கர் வரை தண்ணீர் வசதி மற்றும் கால்நடைகளின் எண்ணிக்கையினை பொறுத்து தீவனபயிர் பண்ணை அமைக்கலாம். 
3500 ஏக்கர் பரப்பளவிலான விவசாயிகளின்  மானாவாரி நிலத்தில் பசுந்தீவனம் சாகுபடி செய்வதற்கு வருடப்பயிரான தீவனச்சோளம் மற்றும் காராமணி தீவன விதைகள் மானியமாக வழங்கப்படும். பயனாளிகள் 25 சென்ட் முதல் 2 ஏக்கர் வரை மானியம் பெறலாம். 
கால்நடைகளுக்கு வழங்கப்படும் கோ-4 மற்றும் கோ.எப்.எஸ்-29 பசுந்தீவனத்தை சாகுபடி நிலத்திலிருந்து அறுவடை செய்வதற்கு தூத்துக்குடி மாவட்டத்திற்கு 30 எண்ணம் புல் வெட்டும் கருவிகள் வழங்கிட குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  ஒரு அலகிற்கு 75 சதவிகித மானிய தொகை ரூ.18,750/- வழங்கப்படும்.  பயனாளி குறைந்த பட்சம் 0.5 ஏக்கர் தீவனப்பயிர் பயிரிடுபவராகவும், குறைந்தபட்சம் இரண்டு கால்நடைகள் பராமரிப்பவராகவும் இருத்தல் வேண்டும்.
மேற்படி மாநில தீவன அபிவிருத்தி திட்டம் 2020-21 திட்டத்திற்கு முதலமைச்சர் அவர்களின் விலையில்லா கறைவைப்பசுக்கள் விநியோக திட்டத்தின் பயனாளிகள், சிறு மற்றும் குறு விவசாயிகள், ஆவின் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் குறிப்பாக 30 சதவிகிதம் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தவருக்கு விதிமுறைகளுக்குட்பட்டு முன்னுரிமை வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே பயனடைந்த பயனாளிகள் தற்போது பயன்பெற இயலாது. எனவே, இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விருப்பமுள்ள கால்நடை வளர்ப்போர் அருகிலுள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை நேரில் தொடர்பு கொண்டு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை 20.08.2020,க்குள்; அளித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார்;.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo