Onetamil News Logo

மீன்பிடிக்க சென்றபோது கடலில் தவறி விழுந்த மீனவர் ;கடலோர பாதுகாப்பு படையினரும், போலீசாரும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Onetamil News
 

மீன்பிடிக்க சென்றபோது கடலில் தவறி விழுந்த மீனவர் ;கடலோர பாதுகாப்பு படையினரும், போலீசாரும் தீவிரமாக தேடி வருகின்றனர்.     


தூத்துக்குடி 2019 நவம்பர் 14 ;தூத்துக்குடியில் மீன்பிடிக்க சென்றபோது கடலில் தவறி விழுந்த மீனவர் ;கடலோர பாதுகாப்பு படையினரும், போலீசாரும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்தவர் சேசையா. இவருக்கு சொந்தமான பைபர் படகில், தூத்துக்குடி சாமுவேல்புரத்தை சேர்ந்த செய்யது இப்ராகிம்‌ஷா (வயது 42) உள்பட 5 மீனவர்கள் கடந்த 11-ந் தேதி திரேஸ்புரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றனர்.இவர்கள் நேற்று காலை 8 மணி அளவில் தூத்துக்குடியில் இருந்து 26 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது, செய்யது இப்ராகிம்‌ஷா மீன்பிடிப்பதற்காக வலையை விரித்து உள்ளார்.அப்போது எதிர்பாராதவிதமாக அவர் தவறி கடலில் விழுந்தார். உடனடியாக படகில் இருந்த மற்ற மீனவர்கள் அவரை மீட்க முயற்சித்தனர். அந்த பகுதியில் சுற்றிவந்து அவரை தேடிப்பார்த்தனர். ஆனால், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் கதி என்ன? என்பது தெரியவில்லை.
இதுகுறித்து தகவல் அறிந்த திரேஸ்புரம் மீனவர்கள் பல படகுகளில் சென்று மாயமான மீனவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். அதே போன்று தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு படையினர், கடலோர பாதுகாப்பு போலீசாரும் மாயமான மீனவரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo