Onetamil News Logo

 ஸ்டெர்லைட் தாமிர ஆலை மூடல் எதிரொலி 18 ஆண்டுகளுக்கு பின்னர் தாமிரத்தை  வெளிநாடுகளில் இருந்து  இறக்குமதி செய்யதுவங்கிய இந்தியா

Onetamil News
 

 ஸ்டெர்லைட் தாமிர ஆலை மூடல் எதிரொலி 18 ஆண்டுகளுக்கு பின்னர் தாமிரத்தை  வெளிநாடுகளில் இருந்து  இறக்குமதி செய்யதுவங்கிய இந்தியா


அக்டோபர் 18, 2019 ; தூத்துக்குடியில் அமைந்துள்ள இந்தியாவின் மிகப்பெரிய தாமிர உருக்காலையான ஸ்டெர்லைட், மூடப்பட வேண்டுமென்று தமிழக அரசு பிறப்பித்த ஆணையின் காரணமாக கடந்த 18 ஆண்டுகளில் முதன் முறையாக நிகர தாமிர இறக்குமதி நாடாக மாறியிருக்கிறது.  
இரும்பு சாராத அடிப்படை உலோகங்களுள் ஒன்றான  தாமிரம், பரவலாக தொழில்துறை பயன்பாடுகளை கொண்டுள்ளது.  செம்பு, தாமிரத்திலான மோட்டார்கள், வயரிங், ரேடியேட்டர்கள், கனெக்ட்டர்கள், பிரேக்குகள் மற்றும் பியரிங்குகள் உட்பட பல்வேறு கருவிகள் மற்றும் சாதனங்களில் தாமிரம் முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது. தாமிரத்தின் பயன்பாடு இல்லாத கருவிகளே இல்லாத நிலை உள்ளது.  இந்தியச் சந்தையில் பிரதான தொழில்களில் ஒன்றான தாமிர தொழில் துறையில்  மூன்று பெரிய நிறுவனங்கள் தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்திய அரசு நிறுவனமான இந்துஸ்தான் காப்பர், தனியார் நிறுவனமான  ஹிண்டால்கோ லிமிடெட் குழுமம் மற்றும் வேதாந்தா குழுமத்தைச் சேர்ந்த ஸ்டெர்லைட் ஆகியவையாகும்.  இந்த 3 நிறுவனங்களிலும் ஸ்டெலைட் நிறுவனம் பெரும் தாமிர உற்பத்தியில் பெரும் பங்கு கொண்டிருந்தது. மேலும் இந்த உற்பத்தியின் காரணமாக கடந்¬ 2014-&2018 ம் நிதியாண்டின்போது சுத்திகரிக்கப்பட்ட தாமிரத்தின் உள்நாட்டு உற்பத்தியானது 9.6% சிகிநிஸி என்ற அளவில் வளர்ச்சி நிலையை எட்டியிருந்தது.
இந்நிலையில் 2018 மே 28ம் தேதியன்று தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் நிறுவனத்தின் ஒரு ஆண்டுக்கு 4 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யும் தாமிர உருக்காலை  தமிழக அரசின் உத்தரவால் மூடப்பட்டது. இதன்  காரணமாக 208&2019ம் நிதியாண்டில் மொத்த  தாமிர உற்பத்தியில்  46.1 சதவிகிதம் குறைந்துள்ளது. இத்தகவலை ஊர்விஷா ஜெகசேத் என்ற கேர் ரேட்டிங்ஸ் பகுப்பாய்வாளர் ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 
உலக புகழ்பெற்ற பிரபல தொழிலதிபரான அனில் அகர்வால் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள வேதாந்தா குழுமத்தின் ஒரு அங்கமான ஸ்டெர்லைட் உருக்காலையானது மாசு விளைவிக்கிறது என்று தெரிவித்து,  பொதுமக்களில் ஒரு பகுதியினர் நடத்திய போராட்டம் கடந்த 2018 மே 22ம் தேதி நடந்தது. இந்த போராட்டத்தின்போது பெரும் கலவரம் உருவாகியது. இக்கலவரத்தின்போது நடைபெற்ற காவல்துறையின் துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதனைதொடர்ந்து மே 28ம்தேதி ஆலையை தமிழக அரசு மூடி சீல் வைத்தது. இதனால் இந்திய நாட்டின் தாமிர உற்பத்தியும் திடிரென குறையத்துவங்கியது. 
இந்தியாவின் மொத்த தாமிர உற்பத்தியில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் உருக்காலையின் பங்கு 40 சதவிகிதமாகும்.  இந்த உருக்காலை மூடப்படுவதற்கு முன்பு வரை, அதாவது  2018ம் நிதியாண்டு வரையில்  தாமிரத்தை பொறுத்தவரையில்  இறக்குமதியை விட அதிகமாக வெளிநாடுகளுக்கு  ஏற்றுமதி செய்யப்படும் நாடாக  இந்தியா இருந்து வந்தது. “இப்போது தூத்துக்குடி உருக்காலை மூடப்பட்டதனால் உள்நாட்டு தாமிர உற்பத்தியானது சரிவினை சந்தித்திருக்கிறது.  இந்நாட்டின் இறக்குமதியை அதிகரிக்கின்ற மற்றும் அதன் ஏற்றுமதிகளை குறைக்கின்ற மோசமான விளைவிற்கு இது காரணமாக அமைந்திருக்கிறது, என்று பகுப்பாய்வாளர் ஜெகசேத் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
 அதுமட்டுமல்லாமல் ஸ்டெர்லைட் மூடப்பட்ட பின்னர் தாமிரத்தின் ஏற்றுமதி அறவே நின்று தற்போது அதனை இறக்குமதி செய்யப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த 18 ஆண்டுகளுக்குப் பிறகு சுத்திகரிக்கப்பட்ட தாமிரத்தினை அதிகமாக  இறக்குமதி செய்யும் நாடாக  இந்தியா மாறியிருக்கிறது.  நடப்பு நிதியாண்டில் சுத்திகரிக்கப்பட்ட தாமிர உற்பத்தி அளவுகளில் மிகச்சிறிய மீட்சி காணப்பட்டிருக்கிறது, இருந்தபோதிலும், உள்நாட்டு தாமிர உற்பத்தியானது. இன்னும் தொடர்ந்து மந்த நிலையிலேயே இருந்து வருகிறது. 
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் உருக்காலையானது இன்னும் இயங்காமல் இருப்பதே இதற்கு காரணமாகும் என்று தெளிவாகியுள்ளது. காப்பர் கத்தோடுகளின் இறக்குமதியானது, 82.6 சதவிகிதம் அதிகரித்துள்ள நிலையில் அதன் ஏற்றுமதிகள் 72.7 சதவிகிதம் சரிவடைந்திருக்கின்றன.  தனது தாமிர கத்தோடுகளின் தேவைப்பாடுகளில் 86 சதவிகிதத்தை ஜப்பானிலிருந்து, இந்தியா இறக்குமதி செய்திருக்கிறது மற்றும் 83 சதவிகிதத்தை  சீனாவிற்கு ஏற்றுமதி செய்திருக்கிறது என்று கேர் ரேட்டிங்ஸ் அமைப்பின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. உள்நாட்டில் தாமிர உற்பத்தி மற்றும் சப்ளைகள் குறைந்துள்ளது தாமிரத்தை சார்ந்திருக்கின்ற  தொழில் பிரிவுகளை பெரிதும் பாதித்துள்ளது. மேலும் தாமிர வரத்து உள்ளிட்டவற்றில்  நிலவும் பிரச்சனைகள் கவலைக்குரியதாக ஆகி வருகின்றன.  
ஸ்டெர்லைட்டின் தாமிர உருக்காலை இன்னும் மூடப்பட்டிருக்கின்ற நிலையில் இறக்குமதி செய்வது மட்டுமே ஒரே வழி.  ஸ்டெர்லைட்டில் தாமிர உற்பத்தி நிகழ்ந்தால் மட்டுமே மாற்றுவழியாகும்.  இது குறித்து மும்பையில் உள்ள பிரெசிஸன் வயர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்  மிலன் மேத்தா கூறுகையில்: முன்பெல்லாம் ஒரு அல்லது இரண்டு நாட்களுக்குள் தாமிரம் எங்களுக்கு கிடைத்துவிடும்.  ஆனால் இப்போது அதற்கு மூன்று முதல் நான்கு வாரங்கள் வரை ஆகிறது.  இதற்கும் மேலாக  செலாவணியில் காணப்படும் ஏற்ற இறக்கங்கள், நீண்ட கால அளவிற்கு முதலீடு அடைபட்டிருப்பது மற்றும் இடையூறுகளுக்கு ஆளாகின்ற நிலையில் நம்மையே வைத்துக்கொள்வது ஆகிய பிரச்சனைகள் பெரும் கவலையாக மாறியிருக்கின்றன,” என்கிறார். மேலும்  ஸ்டீல் மற்றும் அலுமினியத்திற்குப் பிறகு மிக அதிக அளவில் பயன்படுத்தப்படும் உலோகமாக தாமிரம் இருக்கிறது. உலக அளவில் வெறும் 2 சதவிகிதம் என்ற அளவிற்கே தாமிர உலோகத் தாது இருப்புகளை இந்தியா கொண்டிருப்பதால், ஏற்படக்கூடிய எந்தவொரு சீர்குலைவுகளும், தடங்கல்களும் உற்பத்தி மற்றும் சப்ளை தரப்பில்  பிரச்சனைகளை மிகப்பெரிய அளவில் பாதிக்கக்கூடும். 
2019 ம்நிதியாண்டில்  சுத்திகரிக்கப்பட்ட தாமிரத்தை ஜப்பான் (71%), காங்கோ (6%), சிங்கப்பூர் (5%), சிலி (4%), தான்சானியா (4%), யுஏஇ (4%) மற்றும் தென்னாப்ரிக்கா (3%) ஆகிய நாடுகளிலிருந்து இந்தியா இறக்குமதி செய்திருக்கிறது.  அதே காலஅளவில் சீனா (75%), தைவான் (13%), மலேஷியா (5%), தென்கொரியா (5%) மற்றும் பங்களாதேஷ்  (2%)  ஆகிய நாடுகளுக்கு தாமிரத்தை இந்தியா ஏற்றுமதி செய்திருக்கிறது என்று கேர் ரேட்டிங்ஸ்  அறிக்கை தெரிவித்துள்ளது.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo