Onetamil News Logo

மணக்கரையில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அருண் பாலகோபாலன்,தலைமையில்  போலீஸ் - பொது மக்கள் நல்லுறவு கூட்டம் 

Onetamil News
 

மணக்கரையில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அருண் பாலகோபாலன், தலைமையில்  போலீஸ் - பொது மக்கள் நல்லுறவு கூட்டம் 


தூத்துக்குடி 2020 ஜனவரி 19;மணக்கரையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன்,  தலைமையில்  போலீஸ் - பொது மக்கள் நல்லுறவு கூட்டம் நேற்று (18.01.2020) நடைபெற்றது. 
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில் அனைத்து சமுதாய மக்களும் எந்த கருத்து வேறுபாடும் இல்லாமல் அமைதியுடனும், மகிழ்ச்சியுடனும் வாழ வேண்டும் என்றும்,  தேர்தல் என்பது மக்களுக்கு நல்லது செய்வதற்காகத்தான் தேர்தல் நடத்தப்பட்டு பஞ்சாயத்து தலைவர்கள் வருகிறார்கள். தேர்தல் நேரத்தின்போது ஏற்பட்ட சின்ன, சின்ன பிரச்சனைகளை பெரிதாக்கி ஈகோவாக எடுத்துக்கொண்டு தகராறில் ஈடுபடக்கூடாது. தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை உள்ளது, அவர்களுக்கு தண்டனை வழங்க நீதிமன்றம் மற்றும் ஜெயில் உள்ளது. 
எந்தப்பிரச்சனையாக இருந்தாலும் சட்ட ரீதியாக அணுக வேண்டும், காவல்துறை உங்களுக்கு உதவ எந்த நேரத்திலும் தயாராக உள்ளது என்று பேசினார்.  
இவ்விழாவில் மணக்கரை ஊராட்சி தலைவர் சீனிப்பாண்டி, கருங்குளம் ஊராட்சி ஒன்றிய தலைவர் கோமதி ராஜேந்திரன், மதுரை உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞர்  அங்கப்பன், மணக்கரை ஊரைச் சேர்ந்த முத்தையா, துரைப்பாண்டியன், பன்னீர்வேல், நம்பிராஜன், ராமையா உட்பட சுமார் 100க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர்.    
இக்கூட்டத்திற்கு தூத்துக்குடி ஊரக துணை கண்காணிப்பாளர் கலைக் கதிரவன் முன்னிலை வகித்தார். முறப்பநாடு காவல் ஆய்வாளர்  பார்த்திபன், உதவி ஆய்வாளர் ரமேஷ்குமார் மற்றும் காவல்துறையினர் இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.  
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo