Onetamil News Logo

ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் மீளவிட்டான் கிராமத்துக்கு குடிநீர் வசதிக்காக ரூ.47 லட்சம் நிதியுதவி

Onetamil News
 

ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் மீளவிட்டான் கிராமத்துக்கு குடிநீர் வசதிக்காக ரூ.47 லட்சம் நிதியுதவி


தூத்துக்குடி, மார்ச். 10 ;
ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் மீளவிட்டான் கிராமத்துக்கு குடிநீர் வசதிக்காக ரூ.47 லட்சம் நிதியுதவி
தூத்துக்குடி,மார்ச்.10,2018: தூத்துக்குடி மீளவிட்டான் பகுதியில் உள்ள 400 குடும்பங்களுக்கு  தடையின்றி சுத்தமான குடிநீர் கிடைக்க, தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில், அந்த கிராமத்தில் உள்ள சமுதாய தலைவர்களிடம் ரூ.47 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. அந்த பணம் கிராம சமுதாய தலைவர்கள் மூலம், தூத்துக்குடி மாநகராட்சியிடம் அதன் 4வது குடிநீர் குழாய் திட்டத்தில் மீளவிட்டான் கிராமத்துக்கான இணைப்பை பெற டெபாசிட் செய்யப்பட உள்ளது.
                                                                                                                                          இந்த நிகழ்ச்சியில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் திட்டங்கள் மற்றும் மக்கள் தொடர்பு தலைவர் முருகேசுவரன் பேசும் போது, ஒரு பொறுப்புள்ள கார்ப்பரேட் நிறுவனம் என்ற முறையில், வேதாந்தா ஸ்டெர்லைட் காப்பர், தனது நிறுவனத்துக்கு அருகே உள்ள கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. ஒருசில தீய சக்திகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை மக்கள் நம்பி முடங்கிட வேண்டாம். தங்களை உயர்த்திக்கொள்வதற்கான இத்தகைய சந்தர்ப்பங்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கூறினார்.
                                                                                                                                     இந்த நிகழ்ச்சியில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் வணிகத்துறை தலைவர் தனவேல், சமுதாய வளர்ச்சி பிரிவு தலைவர் டாக்டர் கைலாசம் ஆகியோர் உடன் இருந்தனர். ரூ.47 லட்சத்துக்கான காசோலையை கிராம மக்கள் சார்பில் சுதாகர், சேகர், கோவிந்தன் மற்றும் பட்டுராஜ் ஆகியோர் பெற்று கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo