Onetamil News Logo

தூத்துக்குடி அருகே சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் 309வது பிறந்தநாள் விழா ;230 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

Onetamil News
 

தூத்துக்குடி அருகே சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் 309வது பிறந்தநாள் விழா ;230 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி 


 தூத்துக்குடி  2019 ஜூலை 8 ; தூத்துக்குடி மாவட்டம் கட்டாலங்குளத்தில் தமிழக அரசின் சார்பில் நடைபெற்ற சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் அவர்களின் 309வது பிறந்தநாள் விழாவில்  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தி 230 பயனாளிகளுக்கு ரூ.97.08 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
 
தூத்துக்குடி மாவட்டம் கட்டாலங்குளத்தில் தமிழக அரசின் சார்பில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் மூலம் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் அவர்களின் 309வது பிறந்தநாள் விழர் மாவட்ட  ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,  தலைமையில் இன்று (11.07.2019) நடைபெற்றது. 
      இவ்விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூகலந்துகொண்டு, சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் அவர்களின்; திருவுருவச்சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். 
மேலும்,  செய்தி மற்றும் விளம்பரத்துறை  அமைச்சர் , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் கயத்தார் மற்றும் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த  13 பயனாளிகளுக்கு ரூ.27.3 லட்சம் மதிப்பிலான முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகளுக்கான பணி உத்தரவுகளையும், வருவாய் துறை சமூக பாதுகாப்புதிட்டத்தின்கீழ் 77 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணை,  21 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா என மொத்தம் 98 பயனாளிகளுக்கு ரூ.9.13 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், மகளிர் திட்டம் மூலம் 85 பயனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய அம்மா இருசக்கர வாகனம் மற்றும் 02 சுய உதவி குழுக்களுக்கு சுழல்நிதி என மொத்தம் ரூ.50.65 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளும், உதவி ஆணையர் (கலால்)  மூலம் 32 பயனாளிகளுக்கு தலா ரூ.30,000ஃ- மறுவாழ்வு நிதியாக ரூ.9.60 லட்சம் என பல்வேறு துறைகளின் கீழ் மொத்தம் 230 பயனாளிகளுக்கு ரூ.97.08 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். அதனைத்தொடர்ந்து செய்தி மற்றும் விளம்பரத்துறை  அமைச்சர் , சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் அவர்களின்; வாரிசுதாரர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார்கள்.
 விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்  பேசியதாவது:
புரட்சித்தலைவி அம்மா வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த மண்ணான கட்டாலங்குளத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்து ரூ.38.5 லட்சம் மதிப்பில் மணிமண்டபம் கட்டப்பட்டு செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. சென்னையின் மையப்பகுதியில் நுழைவு வாயிலாக திகழும் எழும்பூர் ரயில் நிலையம் அருகில் வீரன் அழகுமுத்துக்கோன்  அவர்களுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வீரன் அழகுமுத்துக்கோன் அவர்களுக்கு தபால்தலை வெளியிட மத்திய அரசை வலியுறுத்தினார்கள். இதனை ஏற்று மத்திய அரசு வீரன் அழகுமுத்துக்கோன் அவர்களுக்கு தபால்தலை வெளியிட்டுள்ளது. 
கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டு நான் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து வீரன் அழகுமுத்துக்கோன் அவர்களுக்கு அரசு விழா தலைநகரான சென்னையில் கொண்டாட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன்.  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சென்னையில் வீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்தார்கள். அவ்வகையில் இன்று  தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் சென்னையில் நடைபெற்ற வீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் பிறந்த நாள் விழாவில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்கள்.  
தூத்துக்குடி மாவட்டம் அதிகமான சுதந்திர போராட்ட தியாகிகள் கொண்ட மாவட்டம் ஆகும். சுதந்திர போராட்ட தியாகிகளின் வாழ்க்கை வரலாற்றினை வருங்கால சந்ததியினர் அறிந்துகொள்ளும் வகையில், ஓட்டப்பிடாரம் வ.உ.சி. இல்லம், கவர்னகிரி வீரன் சுந்தரலிங்கம் மணிமண்டபம், வல்லநாடு வீரன் வெள்ளையத்தேவன் மணிமண்டபம், எட்டயபுரம் பாரதியார் மணிமண்டபம் மற்றும் உமறுப்புலவர் நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. பாரதியார் பாட்டுக்கே மெட்டு அமைத்த இசை மாமேதை நல்லப்பசுவாமி அவர்களுக்கு விளாத்திகுளத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் நினைவு தூண் அமைக்கும் பணிகள் மற்றும் திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களுக்கு ரூ.1.34 கோடி மதிப்பில் மணிமண்டபம் கட்டும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. விரைவில் இதற்கான திறப்பு விழா நடைபெற உள்ளது. நடுகாட்டு சீமையில் வீரன் அழகுமுத்துக்கோன் அவர்களுக்கு நினைவுத்தூண் அமைக்க கோரிக்கை தெரிவித்துள்ளார்கள். இதனை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வாரிசுதாரர்கள் தங்களுக்கு நேரடி வாரிசுதாரர்கள் சான்றிதழ்கள் வேண்டும் என தெரிவித்துள்ளார்கள். இதனை பரிசீலனை செய்து சான்றிதழ்கள் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்  என  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்  பேசினார். 
முன்னதாக  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் , செய்தி மக்கள் தொடர்பு துறையின்  மூலம் தமிழக அரசின் சாதனைகள் குறித்த அம்மா பூங்கா குறித்த குறும்படத்தினை பார்வையிட்டார். 
இவ்விழாவில் கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா, கோவில்பட்டி நகராட்சி ஆணையாளர் அச்சையா, சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் அவர்களின் வாரிசுதாரர்கள்  அழகுமுத்தம்மாள், மீனாட்சிதேவி, சின்னதுரைச்சி, ராஜேஸ்வரி, வனஜா, ராணி, தமிழ்நாடு யாதவ மகாசபை பொது செயலாளர் சுப சிவபெருமாள்யாதவ்,  வட்டாட்சியாகள்; லிங்கராஜ், அற்புதமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துக்குமார்,சீனிவாசன், முக்கிய பிரமுகர்கள் கல்லூர் வேலாயுதம், விஜயபாண்டியன், அய்யாத்துரைபாண்டியன், ரமேஷ்,ராமச்சந்திரன், மகேஷ் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ.சீனிவாசன்  வரவேற்றார். உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) நி.சையத் முஹம்மத் நன்றி தெரிவித்தார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo