Onetamil News Logo

வருகின்ற 16 ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் ;கலெக்டர் அறிவிப்பு 

Onetamil News
 

வருகின்ற 16 ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் ;கலெக்டர் அறிவிப்பு 


தூத்துக்குடி பிப் 13 ; வருகின்ற 16 ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது. மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் அறிவித்துளார்.                                                                                                                                                                             இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது....அனைத்து கிராமங்களில் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள அம்மா திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி வட்டத்தில் குமாரகிரி கிராமத்திலும், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் பூவாணி கிராமத்திலும் திருச்செந்தூர் வட்டத்தில் செட்டியாபத்து  கிராமத்திலும், சாத்தான்குளம் வட்டத்தில் கொம்பன்குளம்  கிராமத்திலும், கோவில்பட்டி வட்டத்தில்;  இனாம்மணியாச்சி கிராமத்திலும், விளாத்திகுளம் வட்டத்தில்; பூசனூர் கிராமத்திலும், எட்டயபுரம் வட்டத்தில் இளம்புவனம் கிராமத்திலும், ஓட்;டப்பிடாரம் வட்டத்தில்; பரிவல்லிக்கோட்டை கிராமத்திலும் இ கயத்தார் வட்டத்தில் கலப்பைபட்டி கிராமத்திலும்  16.02.2018 (வெள்ளிக்கிழமை) அன்று வட்டாட்சியர்கள் தலைமையில் அம்மா திட்ட முகாம் நடைபெறவுள்ளது. மேற்படி முகாம்களில் மக்களின் குறைகளை தீர்க்கும் வண்ணம் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் தி;ட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு - இறப்பு சான்றுகள், சாதிச்சான்றுகள், மற்றும் வருவாய் துறையினரால்; நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு உடனடியாக பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட உள்ளது.
        இந்த முகாம்களில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து பயனடையுமாறு அந்த செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo