Onetamil News Logo

சாமிதோப்பு அய்யா வைகுண்டர் திருக்கோயிலை  இந்து சமய அறநிலையத் துறையில் இணைக்க தமிழக அரசு செய்யும் முயற்சியை கண்டித்து வரும் 18ம்தேதி நாகர்கோவில் சாமிதோப்பில் உண்ணாவிரத போராட்டம் ;தூத்துக்குடியில் கிருஷ்ணவேணி அறிவிப்பு 

Onetamil News
 

சாமிதோப்பு அய்யா வைகுண்டர் திருக்கோயிலை  இந்து சமய அறநிலையத் துறையில் இணைக்க தமிழக அரசு செய்யும் முயற்சியை கண்டித்து வரும் 18ம்தேதி நாகர்கோவில் சாமிதோப்பில் உண்ணாவிரத போராட்டம் ;தூத்துக்குடியில் கிருஷ்ணவேணி அறிவிப்பு 


தூத்துக்குடி  மார்ச் 13 :சாமிதோப்பு அய்யா வைகுண்டர் திருக்கோயிலை இந்து சமய அறநிலையத் துறையில் இணைக்க தமிழக அரசு முயற்சியை கண்டித்து நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ஐந்தாயிரம் பேர்கள்; கலந்து கொள்ள அய்யா வைகுண்டரின் அறக்கட்டளை சார்பில் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது குறித்து செய்தியாளர்களிடம் கிருஷ்ணவேணி கணேசன் கூறியது...   நாகர்கோவில் அருகே உள்ள சாமிதோப்பில் அய்யா வைகுண்டரின் நினைவிடம் உள்ளது. அதனைத் தலைமையிடமாகக் கொண்டு தென் மாவட்டங்கள் மற்றும் பரவலாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அய்யாவழிக் கோயில்கள் உருவாக்கப்பட்டு இயங்கி வருகின்றன. இக்கோயில்களில் சிலை வழிபாடு இல்லை. கோயிலின் கருவறையில் ஆளுயரக் கண்ணாடி மட்டுமே உள்ளது. ஆண், பெண் என அனைவரும் கருவறைக்குள் சென்று வழிபட முடியும். இந்தநிலையில் வைகுண்டரின் தலைமையிடமாக இயங்கும் சாமிதோப்பு அய்யா வைகுண்டர் திருக்கோயிலை இந்து சமய அறநிலையத் துறையில் இணைக்க தமிழக அரசு முயற்சி செய்து வருகிறது. இதைகண்டித்து வரும் 18ம்தேதி நாகர்கோவில் சாமிதோப்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டம் குறித்து தூத்துக்குடியில் உள்ள அய்யா வைகுண்டரின் அறக்கட்டளை சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அய்யாவழி என்பது இந்து மதத்தில் இருந்து மாறுபட்டது. சைவ, வைணவ மடங்களைப் போல அய்யாவழிக் கோயில்கள் இந்து மதம் சார்ந்த மடமுமல்ல. எனவே, இந்த திருக்கோயில்களை இந்து சமய அறநிலையத் துறையில் இணைக்கும் முயற்சியை தமிழக அரசு கைவிட வலியுறுத்தி நாகர்கோவிலில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 5ஆயிரம் பேர் கலந்து கொள்ளுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
இதில் தூத்துக்குடியில் அய்யா வைகுண்டரின் அறக்கட்டளை தலைவர் பொன்ராஜ் ,செயலாளர் ஜெயராஜ்,பொருளாளர் பொன்னுசாமி,சண்முகராஜ்,சந்தன மாரிமுத்து,ராமர்,தங்கேஸ்வரி ,மீனா,நாகலட்சுமி,ராமமூர்த்தி,உட்பட பலர் கலந்து கொண்டனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo