Onetamil News Logo

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு குழுவினர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ முன்னிலையில்  முதல்வரிடம் கோரிக்கை மனு

Onetamil News
 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு குழுவினர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ முன்னிலையில் 
முதல்வரிடம் கோரிக்கை மனு


தூத்துக்குடி 2018 ஜன 10 ; தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு குழுவினர் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன் முன்னிலையில் சென்னை முதலமைச்சர் அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனுவை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களிடம் அளித்தனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி ஆலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பை சார்ந்த பாத்திமாபாபு தூத்துக்குடி மத்திய வியாபாரிகள் சங்க தலைவர் விநாயகமூர்த்தி நாட்டுப்படகு மீனவர் சங்க தலைவர் கயாஸ் வழக்கறிஞர் அதிசயகுமார் ஆகியோர் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களிடம் தமிழக சட்டபேரவையில் சிறப்பு தீர்மானம் கொண்டுவரவும் அல்லது முதல்வர்  அறிவித்த தொழிற்சாலைகள் சிறப்பு சட்டம் நிறைவேற்றி ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி பொதுமக்கள் சார்பில் கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களிடம் வழங்கினார்கள். உடன் முன்னாள் அமைச்சர் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன் மற்றும் தூத்துக்குடி மத்திய வியாபாரிகள் சங்க செயாலாளர் பாஸ்கர் தெர்மல் ராஜா ரீகன் தூத்துக்குடி மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை பொருளாளர் தனராஜ் மாவட்ட மகளிரணி செரினாபாக்கியராஜ் மற்றும் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு குழுவினர் உள்ளனர்.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo