Onetamil News Logo

தம்பியை சுட்டுக்கொன்ற தூத்துக்குடி திமுக இளைஞரணி நிர்வாகி பில்லா ஜெகன் கைது

Onetamil News
 

தம்பியை சுட்டுக்கொன்ற தூத்துக்குடி திமுக இளைஞரணி நிர்வாகி பில்லா ஜெகன் கைது


தூத்துக்குடி 2019 ஏப்ரல் 23 ;தூத்துக்குடியில் சொத்துப் பிரச்சனையால் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி செயலாளர்  தம்பியை நள்ளிரவில் சுட்டுக்கொன்றவர் கைது செய்யப்பட்டார்.                                                                                                                                                                                                                                     தூத்துக்குடியில்  அண்ணன் - தம்பி இடையே நிகழ்ந்த குடும்ப தகராறில், துப்பாக்கியால் சுட்டு  தம்பி உயிரிழந்துள்ளார். இந்த  சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவரும்,  தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி செயலாளருமான  ஜேசு மகன் பில்லா ஜெகன்  என்பவர், அண்ணன் 3 தம்பிகளுடன் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.
இவர்கள் தூத்துக்குடி கால்டு வெல் காலனியில் 2001 ஆண்டு வாடகை வீட்டில் வசித்து வந்தனர். தொழில் வளர்ச்சி அடைந்து பெரும் பணக்காரராக மாறினார்கள். இந்நிலையில் நேற்று  23ம் தேதி நள்ளிரவு  சொத்துப்  பிரச்சனையால் வீட்டில் பிரச்சனை ஏற்பட்டு குடும்ப உறுப்பினர்களுக்குள் சண்டை ஏற்பட்டது.அவர் இரவு உணவருந்தி கொண்டிருந்த போது, அங்கு வந்த தம்பி சிமன்சன் (32) , அண்ணணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்கு வாதம் கை கலப்பாக மாறியதாக  கூறப்படுகிறது.  தொடர்ந்து இருவருக்கும் இடையே நிகழ்ந்த தகராறில், பில்லா ஜெகன் , தம்பி சிமன்சனை  துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இதில். தலையில் பலத்தகாயம் அடைந்த சுமன்சன்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.
இது குறித்து தகவலறிந்த வடக்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்து வந்தனர்.                                                                                                                            இந்த நிலையில் பில்லா ஜெகனை தனிப்படை போலீசார் திருவனந்தபுரம் எல்லையில் மடக்கிப்  பிடித்தார்கள்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo