Onetamil News Logo

காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள தூத்துக்குடி மாவட்ட போலீஸ் எஸ்.பி.ஜெயக்குமார் நடவடிக்கை

Onetamil News
 

காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள தூத்துக்குடி மாவட்ட போலீஸ் எஸ்.பி.ஜெயக்குமார் நடவடிக்கை 


தூத்துக்குடி 2020 செப் 15 ;தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார்,திடீர் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள தூத்துக்குடி தென்பாகம், மத்தியபாகம், வடபாகம், தாளமுத்துநகர், முத்தையாபுரம், தெர்மல் நகர், அனைத்து மகளிர் காவல் நிலையம், காவல் கட்டுப்பாட்டு அறை, தூத்துக்குடி மத்திய குற்றப்பிரிவு ஆகிய காவல் நிலையங்களின் முக்கிய வழக்கு கோப்புகளையும், அலுவலகத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்களையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார்  ஆய்வு செய்தார். 
இந்த ஆய்வின்போது தூத்துக்குடியில் ரவுடித்தனம், கஞ்சா போன்ற போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை ஆகியவற்றை முற்றிலும் ஒழிக்கவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படா வண்ணம் சீர் செய்யவும் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும், காவல் நிலைய நடவடிக்கைகள் அனைத்தும்  சட்டத்திற்குட்பட்டு இருக்கவேண்டும் எனவும் அறிவுரைகள் வழங்கினார். பின் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் மரக்கன்று நட்டார். இந்த ஆய்வின்போது தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ், தென்பாகம் காவல் ஆய்வாளர் ஆனந்தராஜன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை 68 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 26 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்ப்பட்டுள்ளனர். இதில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஈடுபட்டவர்கள் 3 பேரும், மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் 2 பேரும்,  பாலியியல் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் 13 பேரும், சமூக வளைதளங்களில் ஜாதி மத ரீதியாக கலவரத்தை தூண்டும் வகையில் செய்தி, வீடியோ மற்றும் ஆடியோ பரப்பியவர் ஒருவரும் அடங்குவர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை போன்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது 72 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 112 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ரூபாய் 9,25,000/- மதிப்புள்ள 95 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டு, 2 நான்கு சக்கர வாகனங்களும், 9 இரு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 
மேலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டவர்கள் 309 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 319 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ரூபாய் 35,23,000/- மதிப்புள்ள 66,922 கிலோ புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டு, அதற்காக பயன் படுத்தப்பட்ட 5 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 2 இரு சக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo