கனமழையால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் ;தாமிரபரணி ஆற்றுப் பகுதிகளை, கொட்டும் மழையில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் டாக்டர் கி.செந்தில் ராஜ்
தூத்துக்குடி 2021 ஜனவரி 14 ;நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனை அடுத்து, ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, ஏரல், ஆத்தூர், புன்னைக்காயல் ஆகிய ஊர்களில் உள்ள ஆற்றுப் பகுதிகளையும், தாழ்வான பகுதிகளையும் இன்று கொட்டும் மழையில் சென்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், ஏரல் வட்டம் ஆத்தூர் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் வெள்ளநீர் செல்வதை தடுக்கும் வகையில் ஆக்கிரமித்திருந்த அமலைச்செடிகளை அகற்றும் பணிகளையும் அவர் கொட்டும் மழையில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ் பார்வையிட்டு பணிகள் விரைவாக நடக்க உத்தரவிட்டார். அப்போது தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரோன் ஜீத் சிங் காலோன், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் செல்வி தனப்ரியா, ஏரல் வட்டாட்சியர் இசக்கிராஜ், ஆத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் மணிமொழி செல்வன் ரெங்கசாமி மற்றும் அலுவலர்கள் உடன் சென்றனர்.