Onetamil News Logo

ஓட்டப்பிடாரம் சட்டமன்றத்தொகுதியில் 7முறை வென்று அஇஅதிமுக வின் கோட்டையாக நிருபித்துள்ளோம் ; பூத்கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்பு  

Onetamil News
 

ஓட்டப்பிடாரம் சட்டமன்றத்தொகுதியில் 7முறை வென்று அஇஅதிமுக வின் கோட்டையாக நிருபித்துள்ளோம் ; பூத்கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்பு  


ஓட்டப்பிடாரம் 2018 நவம்பர் 8 ;ஓட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அஇஅதிமுக ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
ஓட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அஇஅதிமுக பூத்கமிட்டி ஆலோசனைக் கூட்டம் புதியம்புத்தூர் சுடலைமணி நாடார் மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்டச்செயலாளர் செல்லப்பாண்டியன் தலைமை தாங்கினார்.செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜீ,ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.அமைச்சர் ராஜலெட்சுமி பேசும்போது அஇஅதிமுக தொடங்கி 10 சட்டமன்ற தேர்தல்களை சந்தித்துள்ளது இதில் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத்தொகுதியில் 7முறை வென்று அஇஅதிமுக வின் கோட்டையாக நிருபித்துள்ளோம்.வரும் இடைத்தேர்தலில் தலைமை யாரை வேட்பாளராக நிறுத்துகிறதோ அவர்களை வெற்றிப்பெற செய்து வெற்றிக்கனியை அம்மாவின் நினைவிடத்தில் சமர்பிக்க தொண்டர் அனைவரும் ஒன்றுதிரண்டு செயல்பட வேண்டும் எனப்பேசினார்.
                                                                                                                                                 செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜீ பேசும்போது வரும் 20 தொகுதி இடைத்தேர்தலும் அஇஅதிமுக வினருக்கு வாழ்வா சாவா என்ற நிலையிலுள்ளோம்.எதிர்க்கட்சிகள் நம்மளை எப்பவேண்டுமானாலும் ஆட்சியை கவிழ்த்தலாம் என்ற நிலையில் அவர்களோடு 18 துரோகிகளும் சேர்ந்துள்ளனர்.இந்த நிலையில் நானோ,அமைச்சர் ராஜலெட்சுமியோ ஜமின்தாரோ பண்ணையாரோ கிடையாது.அம்மா அவர்கள் எங்களுக்கு சீட் கொடுத்து வெற்றிப்பெற செய்து மக்கள்பணி செய்ய வாய்ப்பளித்தார்கள்.அதே வழியில் தலைமை யாரை வேட்பாளராக நிறுத்துகிறதோ அவர்களை வெற்றிப்பெற செய்து வெற்றிக்கனியை அம்மாவின் நினைவிடத்தில் சமர்பிக்க எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் இடம் கொடுக்காமல் பூத் கமிட்டி மற்றும் கிளைச்செயலாளர்கள் தொண்டர்கள் என அனைவரும் ஒன்றுதிரண்டு செயல்பட வேண்டும் எனப்பேசினார்.இதில் ஓட்டப்பிடாரம் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் மோகன்,விளாத்திக்குளம் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன்,திருநெல்வேலி ஆவின்பால் சேர்மன் சின்னத்துரை, ஓட்டப்பிடாரம் ஒன்றிய முன்னால் சேர்மன் காந்தி என்ற காமாட்சி மற்றும் நிர்வாகிகள்,தொண்டர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo