Onetamil News Logo

குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதி மொழி தூத்துக்குடி எஸ்.பி. முரளி ரம்பா, தலைமையில் எடுக்கப்பட்டது. 

Onetamil News
 

குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதி மொழி தூத்துக்குடி எஸ்.பி. முரளி ரம்பா, தலைமையில் எடுக்கப்பட்டது. 


தூத்துக்குடி2019 ஜூன் 12 ; குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதி மொழி இன்று காலை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்;காணிப்பாளர் முரளி ரம்பா, தலைமையில் எடுக்கப்பட்டது. 
ஒவ்வொரு ஆண்டும் ஜுன் மாதம் 12ம் தேதி குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதி மொழி எடுக்கப்படுகிறது.  ஆகவே இன்று ஜுன் மாதம் 12ம் நாள் என்பதால் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டு, இன்று (12.06.2019) காலை 11.00 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா,  தலைமையில், காவல்துறை அமைச்சுப்பணி நிர்வாக அதிகாரிகள் திரு. சுப்பையா, திரு. சிவஞானமூர்த்தி, அலுவலக கண்காணிப்பாளர்கள் சுடலைமணி,  மயில்குமார், கணேச பெருமாள், எழில் செல்வம், மாரியப்பன், ராபர்ட்,  நம்பி ராஜன், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர்  பாலமுருகன், உதவி ஆய்வாளர் உமையொருபாகம், சிவக்குமார், காவல்துறையினர் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் கீழ்கண்டவாறு ‘இந்திய அரசியலைமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒரு போதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன் எனவும், அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன் எனவும், குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலும் அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவேன் என்றும், தமிழகத்தை குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் எனவும் உளமாற உறுதி கூறுகிறேன்”;; என உறுதி மொழி எடுத்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo