Onetamil News Logo

அச்சங்குளம் கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.மு.வீரப்பன்  114 பயனாளிகளுக்கு ரூ.11.47 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Onetamil News
 

அச்சங்குளம் கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.மு.வீரப்பன்  114 பயனாளிகளுக்கு ரூ.11.47 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


தூத்துக்குடி 2018 செப் 12 ; தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு வட்டம், அச்சங்குளம் கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.மு.வீரப்பன்  114 பயனாளிகளுக்கு ரூ.11.47 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு வட்டம், அச்சங்குளம் கிராமம், சமுதாய நலக்கூடத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.மு.வீரப்பன் அவர்கள் தலைமையில், மனுநீதி நாள் முகாம் இன்று (12.9.2018) நடைபெற்றது. இம்முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.மு.வீரப்பன் அவர்கள் 114 பயனாளிகளுக்கு ரூ.11.47 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 
பின்னர், மாவட்ட வருவாய் அலுவலர்கள் பேசியதாவது:-
பொது மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில். தொலை தூரத்தில் உள்ள கிராமங்களுக்கு சென்று. மக்களின் குறைகளை கேட்டறிந்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்காகவே இது போன்ற மனு நீதி நாள் முகாம்கள் நடத்தப்படுகின்றது. அச்சங்குளத்தில் நடைபெறும் மனுநீதி நாளையொட்டி, ஏற்கனவே. 111 மனுக்கள் பெறப்பட்டு, 39 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்கள் நடவடிக்கையில் உள்ளது. பிறப்பு முதல் இறப்பு வரை அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தங்கள் துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அலுவலர்கள் இங்கு கருத்துக்களை தெரிவித்தனர். பொது மக்கள். அரசு துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அறிந்து அவைகளை பயன்படுத்திட வேண்டும். அதுமட்டுமின்றி அவைகளை பிறருக்கு எடுத்துச்சொல்லி அவர்களும் பயன்பெற உதவிட வேண்டும். மாண்புமிகு தமிழநாடு முதலமைச்சர் அவர்கள் வரும் ஜனவரி 1, 2019 முதல் பிளாஸ்டிக் இல்லா தமிழகம் என்ற திட்டத்தை அறிவித்துள்ளார்கள். அதனடிப்படையில், நமது மாவட்டத்தில் பல்வேறு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. 
                                                                                                                                           அச்சங்குளம் பகுதியில் உள்ள மக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டினை முற்றிலும் ஒழிக்க அதிகளவிலான துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும். அதுமட்டுமின்றி மழைக்காலம் வர உள்ளதால், டெங்கு விழிப்புணர்வு குறித்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். டெங்கு கொசுக்கள் உருவாகாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், மற்றவர்களுக்கும் டெங்கு விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துச் சொல்லி விழிப்புணர்வ பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த மனுநீதி நாள் விழாவில், வருவாய்த்துறையின் மூலம் 60 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களும், பட்டா மாறுதல் 14 நபர்களுக்கும், புதிய குடும்ப அட்டை 10 நபர்களுக்கும், சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 25 நபர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளும், வேளாண்மைத்துறையின் மூலம் 5 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 114 நபர்களுக்கு ரூ.11,46,599 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. அரசின் திட்டங்களை பெற்று வாழ்வில் முன்னேற வேணடும் என மாவட்ட வருவாய் அலுவலர்கள் பேசினார்.
                                                                                                                                          இம்முகாமில், கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா, தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்புத் திட்டம் சங்கரநாரணயன், இணை இயக்குநர், கால்நடை பராமரிப்புத்துறை டாக்டர்..பிரேமா, மாவட்ட சமூக நல அலுவலர் தனலெட்சுமி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் முத்துலெட்சுமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் தேவிகா, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பாலசுப்பிரமணியன், கயத்தாறு வட்டாட்சியர்கள் லிங்கராஜ், முருகானந்தம் (ச.பா.தி). வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன். ,முத்துக்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo