தென் தமிழகத்துக்கு ரெட் அலெர்ட் எதிரொலி; தூத்துக்குடி வந்த கனிமொழி எம்பி.,
தூத்துக்குடி 2019 டிசம்பர் 1 ;நாளை தலைநகர் டெல்லியில் திமுக பாராளுமன்றக் குழு துணைத் தலைவர் கனிமொழி எம்பி., தலைமையில் ஒரு முக்கிய கூட்டம் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது.!
இந்நிலையில் தொடரும் கனமழை, தென் தமிழகத்துக்கு ரெட் அலெர்ட், குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து மக்கள் பெரும் அவதி - என தொடர்ச்சியாக வந்த செய்திகளால் கவலையுற்று, உடனே தனது தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதி மக்களை சந்திக்க வேண்டுமென முடிவெடுத்து கனிமொழி எம்பி., தூத்துக்குடி வந்தார்.
கனிமொழி எம்பி., தூத்துக்குடியில் உள்ள பழைய SBI காலனி, SKSR காலனி, லூர்தம்மாள்புரம், முத்துகிருஷ்ணா நகர் மற்றும் அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று மக்களை நேரில் சந்தித்தார்.
இன்று அவர் சென்ற இடங்களிலெல்லாம் மக்கள் தாயைத் தேடிய கன்றுகளாய் வாஞ்சையுடன் வரவேற்று தங்கள் மனக்குறைகளை அவரிடம் கொட்டித் தீர்த்தனர். அவரும் சிறிதும் சளைக்காது பொறுமையுடன் அவர்கள் குறைகளை செவிமடுத்துக் கேட்டதுடன், அவற்றைக் களைந்து இயல்பு வாழ்க்கைக்கு அவர்கள் திரும்பும் வண்ணம் உரிய நடவடிக்கைகளை எடுக்க ஆவண செய்வதாக உறுதியளித்தார்.!
மேலும் இதுகுறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளை போர்க்கால அடிப்படையில் விரைந்து செய்ய வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ஆகியோரை நேரில் சந்தித்து பேசினார்.!
பின்னர் அவர் பத்திரிக்கையாளர்களுக்கு இதுகுறித்து பேட்டியளிக்கையில் அங்கே கூடியிருந்த கூட்டத்தினரிடையே இருந்த பெண்மணி ஒருவர் 'தொடர்ச்சியா மழை பேய்ஞ்சதால ரொம்ப சிரமத்துல இருந்தோம். எந்த அதிகாரியும் எங்களை எட்டிக் கூட பாக்கலம்மா. ஆனா எம்பி., நீங்களே நேர்ல வந்திருக்கீங்க. ரொம்ப சந்தோசம்மா.!' என கூறிய நிகழ்வும் நடந்தது.!
உடன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ., மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி மற்றும் கழக நிர்வாகிகள் இருந்தனர்.!