Onetamil News Logo

 தூத்துக்குடியில் மீளவிட்டான் இரயில்வே மேம்பாலம் பணி முடியும் வரை சுங்கசாவடியில் சுங்கவரி வசூல் செய்வதை நிறுத்தி வைக்க உத்தரவிட அரசு வழக்கறிஞர் ஜெயம்பெருமாள் கோரிக்கை 

Onetamil News
 

 தூத்துக்குடியில் மீளவிட்டான் இரயில்வே மேம்பாலம் பணி முடியும் வரை சுங்கசாவடியில் சுங்கவரி வசூல் செய்வதை நிறுத்தி வைக்க உத்தரவிட அரசு வழக்கறிஞர் ஜெயம்பெருமாள் கோரிக்கை 


தூத்துக்குடி 2020 ஜனவரி 20 ; தூத்துக்குடி  - மதுரை பைபாஸ் ரோட்டில் அதிகமான உயிர் பலிகள் ஏற்படும் இடமான மீளவிட்டான் இரயில்வே மேம்பாலம் பணிகள் முடிவடையும் வரையிலும் புதூர் பாண்டியாபுரம் சுங்கசாவடியில் சுங்கவரி வசூல் செய்வதை நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு அரசு வழக்கறிஞர் ஜெயம்பெருமாள் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அரசு வழக்கறிஞர் ஜெயம்பெருமாள் ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு : தூத்துக்குடி - மதுரை நான்கு வழிச்சாலையில் தினசரி ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் மற்றும் பல ஆயிரம் சிறுரக வாகனங்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றன. இந்த சாலையில் வாகனங்கள் சென்று வருவதற்கு புதூர் பாண்டியாபுரம் அருகில் சுங்கச்சாவடி அமைத்து ஆந்திராவை சார்ந்த  மதுகான் ஒப்பந்தக்காரர்கள் சுங்கவரி வசூல் செய்து வருகிறார்கள்.
தூத்துக்குடி சுங்கச் சாவடியில் இருந்து துறைமுகம் செல்லும் நான்கு வழிச்சாலையில் சுங்கச் சாவடி எல்கை முடியும் இடத்திற்கு முன்பு சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ள மீளவிட்டான் இரயில்வே பாலம் வருகின்ற இடத்தில் பல ஆண்டுகளாக ஒரு வழியில் பாலம் கட்டப்படவே இல்லை ஆகையால் பாலம் கட்டிமுடிக்கும் வரை சுங்கம் வசூல் செய்ய தடை விதிக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo