Onetamil News Logo

தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் இரா.சுதாகர், 18 வகை காய்கறி கொண்ட நகரும் காய்கறி பை ரூ200 க்கு பொது மக்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார். 

Onetamil News
 

தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் இரா.சுதாகர்,18 வகை காய்கறி கொண்ட நகரும் காய்கறி பை ரூ200 க்கு பொது மக்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார். 


தூத்துக்குடி 2020 மார்ச் 31 ; தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் இரா.சுதாகர், 18 வகை காய்கறி கொண்ட நகரும் காய்கறி பை ரூ200 க்கு பொது மக்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார். 
தூத்துக்குடியில் ,பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடி மூலமாக நகரும் காய்கறி கடை மூலம் வினியோகம் செய்யும் பணி இன்று துவங்கியது.இந்த நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்  தலைவர் இரா.சுதாகர்,18 வகை காய்கறி கொண்ட நகரும் காய்கறி பை ரூ200 க்கு பொது மக்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார். 
மக்கள் வசிக்கும் தெருக்களில் உள்ள வீட்டிற்கே சென்று  18 வகை காய்கறி மற்றும் கருவேப்பிலை, மல்லி இலை,புதினா இலை ஆகியவை கொண்ட காய்கறி பை ரூபாய் 5 நாள் முதல் ஒரு வார காலத்திற்கு தேவையான 18 வகை காய்கறிகள் கொண்ட தொகுப்பு ரூபாய் 200 க்கு பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடி நகரும் காய்கறி கடை மூலம்  இன்று தூத்துக்குடி ஹவுசிங் போர்டு பகுதியில் வினியோகம் செய்யப்பட்டது. தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் கூட்டுறவு துறை இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படுகின்றது.
இந்த நிகழ்வில் தூத்துக்குடி மண்டல இணைப்பதிவாளர் ரவிச்சந்திரன், தூத்துக்குடி சரக துணை பதிவாளர் சந்திரா மற்றும் பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடியில் மேலாண்மை இயக்குனர் சங்கர், மேலாளர் ராஜதுரை மற்றும் கூட்டுறவு துறை அலுவலர்கள் போன்றோர் பங்குபெற்றார்கள்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo