Onetamil News Logo

மக்கள் சக்தி இயக்கம் சார்பில் மரம் நடும் விழா ; தூத்துக்குடி மாநகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் அருண்குமார் பங்கேற்பு 

Onetamil News
 

மக்கள் சக்தி இயக்கம் சார்பில் மரம் நடும் விழா;தூத்துக்குடி மாநகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் அருண்குமார் பங்கேற்பு 


தூத்துக்குடி 2020 மே 26 ;  மக்கள் சக்தி இயக்கம் சார்பில் மரம் நடும் விழாவில் தூத்துக்குடி மாநகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் அருண்குமார் பங்கேற்று சிறப்பு செய்தார். 
தூத்துக்குடி பசுமையாக மரங்கள் நிறைந்த பகுதியாக மாற்றும் முயற்சியில் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் தூத்துக்குடியில் மரக்கன்றுகளை நட்டு வருகிறது. மக்கள் சக்தி இயக்கத்தின் மாவட்ட செயலாளர் கந்தசாமி தலைமை தாங்கினார்.இதில் கடந்த 32 ஆண்டுகளாக மிகுந்த ஆர்வத்துடன் தூத்துக்குடி பல பகுதிகளில் மரங்களை நட்டு வரும் பிரபல பேட்டரி நிறுவன உரிமையாளரும் மக்கள் சக்தி இயக்கத்தின் மரம் வளர்ப்பு பொறுப்பாளர் தாமோதரன்,தூத்துக்குடி மாநகராட்சி சுகாதார அலுவலர் ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
இந்த மரம் நடும் விழாவிற்கு தூத்துக்குடி மாநகராட்சி மாநகர் நல அலுவலர் டாக்டர் அருண்குமார் வருகை தந்து தூத்துக்குடி பாளையங்கோட்டை தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் நிழல் தரும் மரக்கன்றை இன்று நட்டு வைத்தார்.   இந்த நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஆய்வாளர் பாலசுப்ரமணியன் ,தமிழ் பண்பாடு மேம்பாட்டு மையத் தலைவர் செ.ஜெகஜீவன்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.  
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo