Onetamil News Logo

அதிமுகவினர் கூட்டுறவு தேர்தலில் இடையூறுகளை கொடுத்தார்கள்,ஆனால் நாம்  இடையூறுகளை அவர்களுக்கு கொடுத்தால் தாங்கிக் கொள்ள மாட்டார்கள் ;  தூத்துக்குடியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் உறுப்பினர் படிவம் சேர்க்கை தொடக்க விழாவில் மாணிக்கராஜா எழுச்சி பேச்

Onetamil News
 

அதிமுகவினர் கூட்டுறவு தேர்தலில் இடையூறுகளை கொடுத்தார்கள்,ஆனால் நாம்  இடையூறுகளை அவர்களுக்கு கொடுத்தால் தாங்கிக் கொள்ள மாட்டார்கள் ;  தூத்துக்குடியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் உறுப்பினர் படிவம் சேர்க்கை தொடக்க விழாவில் மாணிக்கராஜா எழுச்சி பேச்சு 


 

தூத்துக்குடி 2018 மே 15 ; அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை தொடர்பான ஆலோசனைக்‍ கூட்டம்  நடைபெற்றன. இதில் கழகத்தில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது குறித்து நிர்வாகிகளுக்‍கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
புதிய உறுப்பினர்கள் சேர்க்கை தொடர்பான ஆலோசனைக்‍ கூட்டத்திற்கு கழக அமைப்பு செயலாளர் மாணிக்கராஜா தலைமை தாங்கி பேசியதாவது...  அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சிக்கு உறுப்பினர்களை சேர்க்கும் விழாவில் அனைவரையும் பாராட்டுகிறேன் ,அதிமுகவினர் கூட்டுறவு தேர்தலில் இடையூறுகளை கொடுத்தார்கள்,ஆனால் நாம்  இடையூறுகளை அவர்களுக்கு கொடுத்தால் தாங்கிக் கொள்ள மாட்டார்கள் , நமது மாவட்டத்தில் நமது இயக்கம் சிறப்பாக செயல்படுகிறது. 6 மண்டல பொறுப்புகளில் நமது மண்டலம் மட்டுமே முதன்மையாக செயல்படுகிறது. நாம் வரும் சட்டமன்ற தேர்தலில்  200 இடங்களைப் பிடிக்க வேண்டும். ஆர்.கே. நகர் தேர்தலில் வெற்றி பெற்றது போல வரும் தேர்தலில் வெற்றி பெறவேண்டும்.நேற்று கடம்பூரில் 8 மாவட்ட செயலாளர்கள் கூட்டம்  கூட்டினேன்.அதில் பல கருத்துக்களை பேசி இருக்கிறேன்.என்று கூறினார். அதன் பின்னர்  தூத்துக்குடி தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை தொடங்கி வைத்தார். 
                                                                                                                                                தெற்கு  மாவட்ட செயலாளர் இரா.ஹென்றி,வடக்கு மாவட்ட செயலாளர் சுந்தரராஜ் எம்.எல்.ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், பகுதி, ஒன்றிய செயலாளர்கள், வார்டு செயலாளர்கள் என சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.
அடுத்தக்கட்டமாக கழகத்தின் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை பணிகள் விறுவிறுப்பாக நடைபெற ஆலோசனைகள் வழங்கப்பட்டன.. இதில், கழகத் தொண்டர்கள் பலர் ஆர்வமாக பங்கேற்று வருகின்றனர்.
விழாவில்  தெற்கு மாவட்ட செயலாளர் இரா.ஹென்றி தாமல், வடக்கு மாவட்ட செயலளார் ஆர்.சுந்தர்ராஜ் எம்எல்ஏ,  இதில், முன்னாள் மேயர் மகளிர் அணிச் செயலளார் அந்தோணி கிரேஸ், கூட்டுறவு பண்டகசாலை தலைவர் எட்வின் பாண்டியன், நவநீதன் பெரியசாமி, மாநகராட்சி சுடலைமுத்து, பெருமாள்சாமி, ரமேஷ்கிருஷ்ணன், மணத்தி ரவிகுமார், ரூபம் வேலவன், தங்கமாரியப்பன், மாவட்ட துணைச் செயலளார் பாலன், சிறுபான்மை பிரிவு செயலளார் கில்பர், சண்முககுமாரி, ஷேக் உட்பட பலர் கலந்து கொண்டனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo