Onetamil News Logo

ஆத்திகுளம் ,கயத்தார் பகுதிகளில் கொரோனா தொற்று நோய் தடுப்பு பணிகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி, நேரில் பார்வையிட்டு ஆய்வு         

Onetamil News
 

ஆத்திகுளம் ,கயத்தார் பகுதிகளில் கொரோனா தொற்று நோய் தடுப்பு பணிகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி, நேரில் பார்வையிட்டு ஆய்வு         


தூத்துக்குடி 2020 மே 19 ;தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஊராட்சி ஒன்றியம் ஆத்திகுளம், கயத்தாறு பேரூராட்சி புதுக்கோட்டை மற்றும் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் கொத்தாலி ஆகிய தனிமைபடுத்தப்பட்ட நோய் கட்டுப்பாட்டு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தொற்று நோய் தடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஊராட்சி ஒன்றியம் ஆத்திகுளம், கயத்தாறு பேரூராட்சி புதுக்கோட்டை மற்றும் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் கொத்தாலி ஆகிய தனிமைபடுத்தப்பட்ட நோய் கட்டுப்பாட்டு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தொற்று நோய் தடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, இன்று (19.05.2020) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
மேலும், நோய் கட்டுபாட்டு தடுப்பு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் காய்கறிகளை அந்த பகுதிகளிலே கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை தீவிரப்படுத்திட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். மேலும், தன்னார்வலர்கள் மூலம் அத்தியாவசிய பொருட்களை அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு வழங்கிட வேண்டும் எனவும், வீட்டில் இருந்து பொதுமக்கள் வெளி வரும்போது முககவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை மற்றும் அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.
தூத்துக்குடி மாவட்டத்திற்கு வெளி மாவட்டம், வெளி மாநிலத்தில் இருந்து வருகை தரும் நபர்களை சோதனை சாவடியில் முழுமையாக பரிசோதனை செய்த பின் அவர்களை பிரி கொரான்டைன் முகாமுக்கு அனுப்பி வைக்க வேண்டும். சோதனை சாவடிகளில் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். 

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தெரிவித்தாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்திற்கு வெளி மாவட்டம், வெளி மாநிலத்தில் இருந்து நமது மாவட்டத்தை சார்ந்த பல்வேறு தொழிலாளர்கள் வந்து கொண்டு இருக்கிறார்கள். இதில் குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலத்தில் இருந்து அதிகமான நபர்கள் தொடர்ந்து வருகை தந்து கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் சோதனை சாவடியில் பரிசோதனை செய்யப்பட்டு பிரி கொரான்டைன் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளபடுகிறது.

பின்னர் கொரோனா தொற்று இல்லை என்ற நிலை ஏற்பட்டால் அவர்களை  வீட்டுக்கு அனுப்பி வைத்து வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டி தனிமைப்படுத்தப்படுகிறது. கொரோனா தொற்று நோய் உறுதியான நபர்களை தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை அளிக்கபடுகிறது. அனுமதி பெறாமல் வாகனங்களில் ஏறி வரும் நபர்களை கண்டறிவதற்கு மாவட்டத்தில் பிரதான சாலைகள் மற்றும் குறுக்கு சாலைகளில் சோதனை சாவடி கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து கிராமங்களிலும் கிராம ஊராட்சித் தலைவர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. நோய் கட்டுபாட்டு பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே வீட்டில் இருந்து வெளிவர வேண்டும். வீட்டில் இருந்து பொதுமக்கள் வெளி வரும்போது முககவசம் அணிய வேண்டும். மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார். 
ஆய்வின்போது கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் விஜயா, கயத்தாறு வட்டாட்சியர் பாஸ்கரன்,  கயத்தாறு பேருராட்சி செயல் அலுவலர் ஜோதிபாசு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன் (கயத்தாறு), வளர்மதி (ஓட்டப்பிடாரம்), வட்டார மருத்துவ அலுவலர் மரு.தங்கமணி, மரு.சுதர்சன், சுகாதார ஆய்வாளர் காளிமுத்து மற்றும் அலுவலர்கள் உட்பட பலர்  உடன் இருந்தனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo