Onetamil News Logo

தூத்துக்குடி தெப்பகுளம் மாரியம்மன் கோவில் சூரசம்ஹார நிகழ்ச்சி ;ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு 

Onetamil News
 

தூத்துக்குடி தெப்பகுளம் மாரியம்மன் கோவில் சூரசம்ஹார நிகழ்ச்சி ;ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு 


தூத்துக்குடி 2019 அக்டோபர் 8 ;தூத்துக்குடியில் நவராத்திரி விழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன. விழா நாட்களில் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மேலும் அம்மனுக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடந்து வந்தன. தூத்துக்குடி மாநகர பகுதிகளில் அம்மன் ஊர்வலம் நிகழ்ச்சிகளும் நடந்தன.
மேலும் அம்மனுக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடந்து வந்தன. விழாவின் சிகர நிகழ்ச்சியாக தூத்துக்குடி தெப்பகுளம் மாரியம்மன் கோவில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. அம்மன் சிம்ம வாகனத்தில் ஏறி சூரனை வதம் செய்ய புறப்பட்டார். கஜமுகாசூரன், சிங்கமுகாசூரன், மகிஷாசூரன் உள்ளிட்ட சூரன்களை அம்மன் வதம் செய்தார்.இதே போன்று தூத்துக்குடி மாநகரில் பல்வேறு பகுதியில் உள்ள அம்மன் கோவில்களிலும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.தூத்துக்குடி மேலூர் பத்திரகாளியம்மன் கோவில் சூரசம்ஹார நிகழ்ச்சி கீழரதவீதியில் நடந்தது. சூரசம்ஹார நிகழ்ச்சியின் போது, அம்மன் சிம்ம வாகனத்தில் ஏறி சூரனை வதம் செய்ய புறப்பட்டார். கஜமுகாசூரன், சிங்கமுகாசூரன், மகிஷாசூரன் உள்ளிட்ட சூரன்களை அம்மன் வதம் செய்தார்.ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று சாமி தரிசனம் பெற்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo