Onetamil News Logo

தூத்துக்குடியில் சாலை பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு   மினி மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை எஸ்.பி.முரளி ரம்பா தொடங்கிவைத்தார்.

Onetamil News
 

தூத்துக்குடியில் சாலை பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு   மினி மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை எஸ்.பி.முரளி ரம்பா தொடங்கிவைத்தார்.


தூத்துக்குடி 2019 பிப்ரவரி 10 ; தூத்துக்குடியில் சாலை பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு இன்று காலை   7 மணி அளவில் தூத்துக்குடி வஉசி கல்லூரி முன்பாக இருந்து தருவை மைதானம் வரை மினி மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.. இதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா  துவக்கி வைத்தார். 
மினி மாரத்தான் ஒட்டம் தூத்துக்குடி தருவை மைதானம் வந்தடைந்து நிறைவு பெற்றது. போட்டியில்  வெற்றி பெற்றவர்களுக்கு தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ், சிறப்புரையாற்றி பரிசு வழங்கினார்.நூற்றாண்டு அரிமா சங்கம், ஜே. சி.ஐ.பியர்ல் சிட்டி மற்றும் தூத்துக்குடி ரோட்டரி சங்க தலைவர், மற்றும் உறுப்பினர்கள் ,மத்திய பாகம் காவல் ஆய்வாளர் ரேனியஸ் ஜேசுபாதம் காவல் கட்டுப்பாட்டு அறை காவல் ஆய்வாளர் ஜென்சி காவல்துறை போக்குவரத்து ஆய்வாளர் சிசில்,உதவி ஆய்வாளர் மயிலேறும் பெருமாள், உதவி ஆய்வாளர் ரவிக்குமார், காவல்துறையினர், மாணவர்கள், மற்றும்  பொதுமக்கள்  கலந்து கொண்டனர்
 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo