Onetamil News Logo

டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் வாழ்க்கை வரலாறு ;மணிமண்டபத்தினை நாளை மறுநாள் காலை 11.00 மணியளவில் முதலமைச்சர் திறந்து வைக்கிறார். 

Onetamil News
 

டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் வாழ்க்கை வரலாறு ;மணிமண்டபத்தினை நாளை மறுநாள் காலை 11.00 மணியளவில் முதலமைச்சர் திறந்து வைக்கிறார்.   


தூத்துக்குடி 2020 பிப்ரவரி 20 ;தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், வீரபாண்டியன்பட்டணம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார்  மணிமண்டபத்தினை நாளை மறுநாள் (22.2.2020) காலை 11.00 மணியளவில் திறந்து வைக்கவுள்ளார்கள்.
  முதலமைச்சர்  எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அரசு, நாட்டிற்காக பெரும் தொண்டாற்றி பல்வேறு தியாகங்களைச் செய்த தலைவர்கள் மற்றும் சான்றோர்களை சிறப்பிக்கும் வகையிலும், அவர்களின் தியாகங்களை வருங்கால சந்ததியினர் அறிந்துகொள்ளும் வகையிலும், நினைவிடங்கள், நினைவு இல்லங்கள், நினைவுச் சின்னங்கள் மற்றும் மணிமண்டபங்களை உருவாக்கியுள்ளது. அதன்படி, தற்போது தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் 1 கோடியே 34 இலட்சத்து 28 ஆயிரம் ரூபாய் செலவில் 60 சென்ட் நிலத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. 
 டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் , ஆதித்தனார்-கோவிந்தம்மாள் இணையருக்கு இரண்டாவது மகனாக 1936ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24ஆம் நாள் பிறந்தார். இராமகிருஷ்ணா உயர்நிலைப்பள்ளியில் படித்த பின் மாநிலக் கல்லூரியில் படிப்பைத் தொடர்ந்து, பி.ஏ பட்டம் பெற்றார். கல்லூரியில் படிக்கும்போதே தேசிய மாணவர் படை (NCC) தளபதியாக இருந்ததுடன் சென்னை மாநகரில் உள்ள அனைத்துக் கல்லூரிகளின் (NCC)  படைகளுக்கு தலைவராக நியமிக்கப்பட்டார். இந்திய துணைக்கண்டத்தில், பத்திரிகை, விளையாட்டு, கல்வி, தொழில் முதலான பல்வேறு துறைகளிலும் பெரும் சாதனையாளராகத் திகழ்ந்தவர் டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் ,   சி. பா. ஆதித்தனார்  1942ஆம் ஆண்டு தினத்தந்தி நாளிதழைத் தொடங்கினார். தந்தையை பின்பற்றி பத்திரிகைத் துறையில் சிவந்தி ஆதித்தன்  ஈடுபட்டார். அச்சுக் கோர்ப்பவர், அச்சிடுபவர், பார்சல் கட்டி அனுப்புகிறவர், பிழை திருத்துபவர், நிருபர், துணை ஆசிரியர் என பத்திரிகையின் அனைத்து துறைகளிலும் பயிற்சி பெற்றார். 

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo