Onetamil News Logo

தூத்துக்குடியில் அத்தி பூத்தார் போல் பிடிபட்ட 10 கோடி மதிப்புள்ள 16 டன் செம்மரக்கட்டைகள் இன்று பறிமுதல் ;   தூங்கும் அதிகாரிகள் விழித்துகொள்வார்களா?    

Onetamil News
 

தூத்துக்குடியில் அத்தி பூத்தார் போல் பிடிபட்ட 10 கோடி மதிப்புள்ள 16 டன் செம்மரக்கட்டைகள் இன்று பறிமுதல் ;   தூங்கும் அதிகாரிகள் விழித்துகொள்வார்களா?    


தூத்துக்குடி  2020 நவம்பர் 20 வெள்ளிக்கிழமை ;தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகம் வழியாக அயல்நாட்டிற்கு கடத்த இருந்த சுமார் 10 கோடி மதிப்பிலான செம்மரக் கட்டைகளை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை பறிமுதல் செய்துள்ளது.
தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகம் வழியாக அயல்நாட்டிற்கு செம்மரக்கட்டைகள் கடத்தப்பட உள்ளதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி பாளையங்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது TN04 AF 6933 என்ற நம்பர் கொண்ட கண்டெய்னர் லாரியை அதிகாரிகள் மடக்கினர் ‌. 
அதிகாரிகளை கண்டவுடன் லாரியிலிருந்து டிரைவர் தப்பி ஓடியதால் லாரியை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் செம்மர கட்டைகள் இருப்பது தெரியவந்தது. உடனே அதிகாரிகள் செம்மரக் கட்டைகளையும் மற்றும் லாரியையும் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து மத்திய  வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.             
   விசாரணை   ;தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி அருகேயுள்ள ஏ.எல்.எஸ் என்ற தனியார் கண்டெய்னர் தளத்திற்கு பறிமுதல் செய்த லாரியை கொண்டு வந்து விசாரித்த பொழுது முதல் கட்ட விசாரணையில் து 40அடி நீளம் கொண்ட கண்டெய்னரில் தேங்காய் ஏற்றுமதி என்று பதிவு செய்து சுமார் 10 கோடி மதிப்புள்ள 16 டன் செம்மர கட்டைகளை பதுக்கி இருப்பது தெரியவருகிறது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo