Onetamil News Logo

தூத்துக்குடி மாவட்டத்தில் 2019ஆம் அண்டிற்கான சுதந்திர தின விருதுக்கு தகுதியுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன 

Onetamil News
 

தூத்துக்குடி மாவட்டத்தில் 2019ஆம் அண்டிற்கான சுதந்திர தின விருதுக்கு தகுதியுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன 


தூத்துக்குடி2019 ஜூன் 12 ; தூத்துக்குடி மாவட்டத்தில் 2019ஆம் அண்டிற்கான சுதந்திர தின விருதுக்கு தகுதியுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன - மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,  தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது ....
  2019ஆம் அண்டிற்கான பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த தற்பொழுது தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் சிறந்த சமூக சேவகர் மற்றும் சிறந்த சேவை நிறுவனத்திற்கு கௌரவிக்கும் பொருட்டு சுதந்திர தின விருது வழங்க ஆணை பெறப்பட்டுள்ளது. கீழ்க்கண்ட தகுதியுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
  தமிழ்நாட்டை பிறப்பிடமாகக் கொண்டவர். 18 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூகநலன் சார்ந்த நடவடிக்கைகள் பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மகளிர் நலனுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து  பணியாற்றும் சிறந்த சமூக சேவை நிறுவனம் மற்றும் சிறந்த சமூக சேவராக இருத்தல். விண்ணப்பதாரர் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பாக சேவை புரிந்த விபரம் 1 பக்க அளவில் தமிழ் (வானவில் அவ்வையார்) மற்றும் ஆங்கிலத்தில் (Arial) (Soft Copy and Hard Copy)  அனுப்ப வேண்டும். விண்ணப்பதாரரின் கருத்துரு (Booklet-2) (தமிழ்-1 மற்றும் ஆங்கிலம்-1) மற்றும் Passport Size Photo  உடன் இவ்வலுவலகத்திற்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் 20.06.2019 தகுதியுடையவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி. 
மாவட்ட சமூகநல அலுவலர்,மாவட்ட சமூகநல அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் வளாகம்,கோரம்பள்ளம்,தூத்துக்குடி-628101                     போன் -0461-2325606 - என மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,தெரிவித்துள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo