Onetamil News Logo

திமுக மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல் பிறந்தநாள் விழா ; கேக் வெட்டியும், குழந்தைகளுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது. 

Onetamil News
 

திமுக மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல் பிறந்தநாள் விழா ; கேக் வெட்டியும், குழந்தைகளுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது. 


 தூத்துக்குடி 2019 மார்ச் 15 ;  திமுக மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல் பிறந்தநாள் விழாவினை இளைஞர் அணியினர் கேக் வெட்டியும், குழந்தைகளுக்கு இரவுஉணவு வழங்கியும் கோலாகலமாக கொண்டாடினர்.
                                                                                                                                               திமுக மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல் பிறந்தநாள் விழாவினை தூத்துக்குடி இளைஞர் அணியினர் ஆண்டுதோறும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இதன்படி, இந்தாண்டிற்கான பிறந்தநாள் விழாவினை இளைஞர் அணியினர் தூத்துக்குடி நேசக்கரங்கள் அறக்கட்டளை இல்லத்தில் திமுக இளைஞர் அணி வசந்த் தலைமையில் சிறப்பாக கொண்டாடினர். விழாவிற்கு, முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர்கள் குபேரன், ஆனந்தராஜா, திமுக இளைஞரணி தனபால்ராஜ், பால்துரை, திரேஸ்புரம் போஸ் ரீகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞர் அணி சேக் முகம்மது வரவேற்று பேசினார்.
முன்னதாக குழந்தைகள் முன்பு கேக் வெட்டி மகிழ்ந்தனர். அதனைத் தொடர்ந்து அங்குள்ள குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் இரவுஉணவும், குழந்தைகளுக்கு தேவையான எழுதுபொருட்கள், நோட்டு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர்.
                                                                                                                                                 இதில், திமுக இளைஞரணி நிர்வாகிகள் முத்தரசன், ராஜூபாய், காளீஸ்வரன், செந்தில், வழக்கறிஞர் ராஜபாண்டி, காட்சன், கற்குவேல்ராஜா, பிருத்விராஜ், ராபின், விமல்ஜீ, தளபதிமுருகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo