Onetamil News Logo

உப்பாற்று ஓடை ஆக்கரமிப்பு விவகாரம்;முள்ளக்காடு, முத்தையாபுரம் ,அத்திமரப்பட்டி கிராம விவசாயிகள் சங்கத் தலைவர் அழகுராஜா பேட்டி 

Onetamil News
 

உப்பாற்று ஓடை ஆக்கரமிப்பு விவகாரம்;முள்ளக்காடு, முத்தையாபுரம் ,அத்திமரப்பட்டி கிராம விவசாயிகள் சங்கத் தலைவர் அழகுராஜா பேட்டி 


தூத்துக்குடி 2020 ஜூலை 8 ; தூத்துக்குடி அத்திமரப்பட்டியில் உப்பாற்று ஓடையில் தனியார் கம்பெனிகளின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் சங்கத்தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார். 
இதுகுறித்து தாமிரபரணி வடகால் கோரம்பள்ளம் குளம் பாசனர் சங்கம் மடை எண் -2 நீரினை பயன்படுத்துவோர் சங்கம் எண் 60, முள்ளக்காடு, முத்தையாபுரம் ,அத்திமரப்பட்டி கிராம விவசாயிகள் சங்கத் தலைவர் அழகுராஜா  தெரிவித்தார்.மேலும் அவர் கூறியதாவது,....
தூத்துக்குடியில் எதிர்வரும் பருவ மழையில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பது குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவேண்டும். எனவே, பொதுப்பணித் துறை நீர்வள ஆதார அமைப்பு மூலம் தூத்துக்குடி அருகே உப்பாற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி  கரைகளை பலப்படுத்திடவேண்டும். எதிர்காலத்தில் மழையால் ஏற்படும் வெள்ளம் நகருக்குள் வராமல் கடலுக்குள் செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
தூத்துக்குடி மாவட்டத்திற்குள் வரும் வெள்ள நீர் அத்திமரப்பட்டி,காலங்கரை ,வீரநாயக்கன் தட்டு போன்ற கிராமங்களுக்கு வெள்ளநீர் புகாமல் கடலுக்குள் நேரடியாக செல்லும் வகையில், நீண்டகால திட்டம் தயாரிக்கப்பட்ட வேண்டும் என்றார் அவர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo