Onetamil News Logo

தூத்துக்குடி அண்ணாநகர் சந்தனமாரி அம்மன் கோயிலில் 108 பால்குட ஊர்வலம் ;60-வது ஆண்டு கொடை விழா

Onetamil News
 

தூத்துக்குடி அண்ணாநகர் சந்தனமாரி அம்மன் கோயிலில் 108 பால்குட ஊர்வலம் ;60-வது ஆண்டு கொடை விழா


திருச்செந்தூர் 2019 ஆகஸ்ட் 13 ;தூத்துக்குடி, அண்ணாநகர் 4வது தெருவில் உள்ள விஸ்வகர்ம சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ சந்தன மாரியம்மன் மற்றும் ஸ்ரீ துர்கை அம்பாள் திருக்கோயிலில் 60-வது ஆண்டு கொடை விழா இன்று நடைபெறுகிறது. 
கடந்த 07.08.19 செவ்வாய்க் கிழமை அன்று கால்நாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிளக்கு பூஜை நடைபெற்றது. 12.08.19 திங்கட்கிழமை அன்று தீர்த்தவாரி செல்லுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. கொடை விழாவான 13.08.19 இன்று, விஸ்வகர்ம இளைஞர் அணியினர் சார்பாக, டூவிபுரம் ஸ்ரீ பாரத சித்தி விநாயகர் திருக்கோயிலில் இருந்து  மேளதாளத்துடன் 108 பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது.
 மதியம் 12 மணிக்கு மதியக்கொடையும், அதனைத் தொடர்ந்து அன்னதானம், மாலை 6 மணிக்கு பெண்கள் முளைப்பாரி, மாவிளக்கு, நேமிசம் எடுத்து வருதல் மற்றும் பொங்கலிடுதல் நடைபெகிறது. மற்றும் இரவு 12 மணிக்கு வான வேடிக்கையுடன் சாமக்கொடையும் நடைபெறுகிறது.  கொடை விழா ஏற்பாடுகளை கோவில் விழாக்கமிட்டியினர் மற்றும் விஸ்வகர்ம இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo