Onetamil News Logo

ஸ்டெர்லைட் ஆலையை மூட லட்சம் பேரை திரட்டி போராட்டம் நடத்துவேன் தூத்துக்குடியில் வைகோ பேட்டி ;பரபரப்பு   

Onetamil News
 

ஸ்டெர்லைட் ஆலையை மூட லட்சம் பேரை திரட்டி போராட்டம் நடத்துவேன் தூத்துக்குடியில் வைகோ பேட்டி ;பரபரப்பு 


 தூத்துக்குடி2018 ஜூன்  13: ஸ்டெர்லைட் தொழிற்சாலை, தூத்துக்குடி அருகே சிப்காட் வளாகத்தில் அமைந்திருக்கிறது. கடந்த 1996-ம் ஆண்டு பல்லாயிரம் கோடி முதலீட்டில் தொடங்கப்பட்ட தொழிற்சாலை இந்த தொழிற்சாலையில் தாமிரம் (காப்பர்) உற்பத்தி செய்வதுதான் பிரதான பணியாகும்.
                                         
ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் இருந்து வெளியாகும் நச்சுப் புகை தூத்துக்குடியில் சுற்றுச்சூழலை மாசு படுத்துவதாகவும், இதனால் மக்களுக்கு நோய்கள் உருவாகி வருவதாகவும் ஆரம்பம் முதல் புகார் கூறப்பட்டு வருகிறது. 1996 முதல் 2000-ம் ஆண்டு வரையிலான காலகட்டங்களில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழு சார்பில் கடுமையான போராட்டங்கள் நடத்தப்பட்டன.
                                          
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடர் போராட்டங்கள் நடத்தியதுடன், நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்து அவரே ஆஜராகி வாதாடினார். ஆனாலும் பல நெருக்கடிகளையும் எதிர்கொண்டு இன்னமும் ஸ்டெர்லைட் ஆலை நீடித்துக் கொண்டிருக்கிறது.
                                                         
 இந்த நிலையில் இன்று வைகோ இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வாதாடினார்.அதன் பின்னர் அவர் தூத்துக்குடியில்  அவரது கார் ஓட்டுநர் துரை இல்லத் திருமணவிழாவில்  கலந்து கொண்டு வாழ்த்திவிட்டு செய்தியாளர்களிடம் கூறியதாவது....ஸ்டெர்லைட் ஆலையை மூட லட்சம் பேரை திரட்டி போராட்டம் நடத்துவேன் என்று தூத்துக்குடியில் வைகோ பரபரப்பாக பேசினார்.`தமிழக அரசை இயக்குவதே ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாக இயக்குநர் அனில் அகர்வால்தான். இந்த ஆலைக்கு எதிராக இனி யாரும் போராட முன் வரக் கூடாது. போராட வேண்டும் என்ற எண்ணமும் ஏற்படக் கூடாது என்ற நினைப்பில் அனில் அகர்வாலின் பேச்சைக் கேட்டு அப்பாவி மக்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது எடப்பாடி அரசு.
ஸ்டெர்லைட் ஆலை சுற்றுப்பகுதிக்கு 144 தடை உத்தரவைப் போட்டுவிட்டுதான் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளது. தூத்துக்குடி மெள்ள மெள்ள இயல்பு நிலைக்குத் திரும்பி வரும் நிலையில், வீடுகளுக்குள் புகுந்து இன்னமும் ஏன் காவல்துறையினர் கைது நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்? மக்கள் அதிகாரம், புரட்சிகர இளைஞர் முன்னணி மற்றும் இன்னும் பல அமைப்பைச் சேர்ந்தவர்களையும் கைது செய்து வருவது ஏன்? 
இச்சம்பவத்தில் மக்களின் கொந்தளிப்பு நிலையைக் கட்டுப்படுத்துவதற்காகத்தான் முழுமையற்ற ஓர் அரசாணையை அவசரகதியில் வெளியிட்டு, ஆலைக்குச் சீல் வைப்பும் நடந்துள்ளது. இது மக்களை ஏமாற்றும் செயல். முற்றிலுமான கண்துடைப்பு நாடகம். 
எந்தவித விளக்கமும் இல்லாமல், குழப்பமான இரண்டு, மூன்று காரணங்களை மட்டும் குறிப்பிட்டு வெளியிடப்பட்டுள்ள இந்த அரசாணையை, ஆலைத் தரப்பினர் நீதிமன்றத்தின் மூலம் எளிதில் உடைத்து விட்டு மீண்டும் ஆலையைத் திறக்க வாய்ப்பு உண்டு. இந்த வாய்ப்பினை ஆலைக்குச் சாதகமாக உருவாக்கியுள்ளது எடப்பாடி அரசு.ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் காப்பர் கிடைக்கவில்லை. அதனால், மின்மாற்றிகளை சரிசெய்ய முடியவில்லை என மின்துறை அமைச்சர் கூறுகிறார். இதன் மூலம் ஆலை திறக்கப்பட வேண்டும் என மறைபொருளுடன் கூறியுள்ளதை அறிய முடிகிறது. மக்களின் கோரிக்கையை ஏற்று அரசு அரசாணை வெளியிட்டது. ஆனால், ஆலைத்தரப்பு நீதிமன்றம் மூலம் ஆலையைத் திறந்துவிட்டது என முதல்வர் சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை.நீதிமன்றம் மூலம் ஆணை பெற்று ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க ஆலைத்தரப்பு முயன்றாலும், ஆலையை நிச்சயம் திறக்க விடமாட்டோம். அப்போதும் மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும். ரத்தினகிரியில் விவசாயிகள் சம்மட்டியுடன் ஆலையை அடித்து நொறுக்கி தரைமட்டமாக்கியது போல இந்த ஆலையும் தரைமட்டமாக்கப்படும் என்று பேசினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo