Onetamil News Logo

தூத்துக்குடி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல் ;கலெக்டர் தகவல் 

Onetamil News
 

தூத்துக்குடி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல் ;கலெக்டர் தகவல்   


தூத்துக்குடி 2020 ஜூலை 10 ;தூத்துக்குடி மாவட்டத்தில் வீரன் அழகுமுத்துகோன் வீரவணக்கம் செலுத்துவதை முன்னிட்டு 11.07.2020 அன்று அனைத்து அரசு மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும் -  மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது அறிவிப்பு  ;தூத்துக்குடி மாவட்டத்தில் வீரன் அழகுமுத்துகோன் வீரவணக்கம் செலுத்துவதை முன்னிட்டு 11.07.2020 அன்று தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடை/பார்) விதிகள், 2003 விதி 12 துணை விதி (2) இன் படி அனைத்து அரசு மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும். மேற்படி நாளில் மதுபான விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதால் அன்றைய தினம் மதுபான விற்பனை நடைபெறக்கூடாது.
மேற்குறிப்பிட்ட தினத்தில் மதுபான விற்னை, மதுபானத்தை ஒரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்கச்சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார்;

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo