வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படும்போது ஆபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவதற்கு தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய இடங்களில் அவசர கால (Emergency Rescue team) பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலை ; எஸ்.பி. ஜெயக்குமார் ஆய்வு
தூத்துக்குடி 2021 ஜனவரி 14 ;தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையை முன்னிட்டு வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படும்போது ஆபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவதற்கு தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய இடங்களில் அவசர கால (Emergency Rescue team) பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர் - வெள்ள பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்; எஸ். ஜெயக்குமார் ஆய்வு செய்தார்.
♻️தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் உத்தரவுப்படி தொடர் மழை, வெள்ளம் மற்றும் புயல் ஆகியவற்றால் பாதிப்பு நேரிட்டால் ஆபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவதற்கு தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய இடங்களில் மாநில பேரிடர் மீட்பு படை (State Disaster Rescue Force) பயிற்சி பெற்ற காவலர்கள் அடங்கிய குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
♻️ஒவ்வொரு குழுவிலும் பேரிடர் மீட்பு படை பயிற்சி பெற்ற வீரர்கள் தலைமையில் தமிழ்நாடு சிறப்பு காவல்படையினர், தூத்துக்குடி ஆயுதப்படை காவலர்கள் மற்றும் அந்தந்த பகுதிகளை நன்கு தெரிந்த மற்றும் நீர், நிலைகள் பற்றி தெரிந்த உள்ளுர் காவலர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
♻️இந்த பேரிடர் மீட்பு படையில் காற்றடைத்து இயந்திர விசையுடன் செல்லக்கூடிய படகுகள், (Inflatable boats), காற்றடைத்து வெளிச்சம் தரக்கூடிய விளக்குகள் (inflatable lights) வலுவான தூக்குப்படுக்கைகள் (Fortable stretcher), முதலுதவி பெட்டி, ஒளிரும் சட்டைகள், பாதுகாப்புச் சட்டை, கடப்பாறை, மண்வெட்டி, அரிவாள், நைலான் கயிறு, பாதுகாப்பு தலைக்கவசம், மரம் அறுக்கும் இயந்திரம், ஒலி பெருக்கி உட்பட 24 வகை உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
♻️தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக வெள்ள பாதிப்ப ஏற்படக்கூடிய அனைத்துப் பகுதிகளுக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணிகள் குறித்து காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் உட்பட காவல்துறையினர் அனைவருக்கும் ஆலோசனை கூறிவருகிறார்.
♻️மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு உதவுவதற்கு காவல்துறையினர் தயார் நிலையில் உள்ளனர் என்றும் பொதுமக்கள் அவசர உதவிக்கு காவல்துறை கட்டுப்பாட்டு அறை தொலை பேசி எண். 100 அல்லது குறுஞ்செய்தி மற்றும் வாட்ஸ் ஆப் வசதியுடன் கூடிய ‘ஹலோ போலீஸ்' 95141 44100 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.