Onetamil News Logo

சென்னையை சேர்ந்த லோடுமேன் தூத்துக்குடியில் போர்க் லிப்ட் வாகனம் மோதி  பலி 

Onetamil News
 

சென்னையை சேர்ந்த லோடுமேன் தூத்துக்குடியில் போர்க் லிப்ட் வாகனம் மோதி  பலி 


                                       
தூத்துக்குடி ஜனவரி 11 ; சென்னையை சேர்ந்த லோடுமேன் தூத்துக்குடியில் போர்க் லிப்ட் வாகனம் மோதி  சிகிச்சை பலன்றி இன்று இறந்தார்.
சென்னை ராயபுரம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி இவரது மகன் மாரியப்பன் (50). இவருக்கு மனைவியும் 3 குழந்தைகளும் சென்னையில் வசிக்கின்றனர்.                                                                                  
                                             
 இவர்,தொழிளுக்காக தூத்துக்குடி தங்கியிருந்து லாரியில் சரக்கு ஏற்ற,இறக்கும் பணியை செய்து  வந்தார். இந்த நிலையில் தூத்துக்குடி அருகே உள்ள செந்திலாம்பண்ணை கிராமத்தில் உள்ள தனியார் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தில் உள்ள சரக்குகளை லாரியில் ஏற்றி கொண்டு இருந்தார். அந்த சமயத்தில் தீடீரென  போர்க் லிப்ட் வாகனம் மோதியதால் தவறி கிழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயம்  அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன்றி இன்று இறந்தார். இது குறித்து தட்டபாறை காவல் நிலையத்தார்  வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo