Onetamil News Logo

தூத்துக்குடி வி.வி.டைட்டானியம் அருகே தண்ணீரை குடித்து மாடு செத்தது;போலீஸ் விசாரணை 

Onetamil News
 

தூத்துக்குடி வி.வி.டைட்டானியம் அருகே தண்ணீரை குடித்து மாடு செத்தது;போலீஸ் விசாரணை 


தூத்துக்குடி 2019 ஆகஸ்ட் 22 ; தூத்துக்குடி வி.வி.டைட்டானியம் அருகே தண்ணீரை குடித்து மாடு செத்தது;இதுகுறித்து விசாரணை செய்திட மாட்டின் உரிமையாளர் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். 
இதுகுறித்து தூத்துக்குடி அருகே தெற்குவீரபாண்டியாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட அ.குமரெட்டியாபுரம் மேலத்தெருவை சார்ந்த கணேசன் மகன் சண்முகராஜ் வழங்கியுள்ள புகார் மனுவில் கூறியதாவது.....  , 
நான் எருமை மாடுகளை வைத்து பால் கறந்து பிழைப்பு நடத்தி வருகிறேன்.தினமும் காலை 8 மணிக்கு மேச்சலுக்கு அழைத்துச்சென்று மதியம் 12 மணிக்கு பால் கறவைக்கு வீட்டுக்கு கொண்டு வருவேன்.மீண்டும் மாலை 4 மணிக்கு மேச்சலுக்கு சென்று விட்டு மாலை 6 மணிக்கு வீட்டுக்கு அழைத்து செல்வேன் இது தான் வழக்கம்.  இந்த நிலையில் வி.வி.டைட்டானியம் தொழிற்சாலைக்கு முன்பு உள்ள ஓடையில் மாடு மேய்ந்து கொண்டிருந்தது.அப்பொழுது ஓடையில் கிடந்த தண்ணீரை  மாடு  குடித்து ஓடையின் எதிர் திசையில் ஓடையின் வழியே சென்றது நான் ரோட்டின் மேலே மாடு போகப் போக நானும் சென்றேன்.மாட்டை வீட்டுக்குத் திருப்பினேன்,ஆனால் வீட்டுக்கு வராமல் மாடு கீழே விழுந்தது.சிறிது நேரத்திலே அது இறந்தது.தூத்துக்குடி வி.வி.டைட்டானியம் தொழிற்சாலை மழைகாலங்களில் திறந்துவிட்ட தண்ணீர் சிறிய பாலம் வழியே ஓடைக்குவந்து  கலந்து விட்டது.அதில் கெமிக்கல் கலப்பதற்கான அறிகுறிகள் அதில் உள்ளது.என்று ஆய்வு நடத்தி எனக்கு உரிய நஷ்ட்டத்தை தந்து உதவிட அவர் கூறியுள்ளார்.
மாடு பரிசோதனை ;
பின்னர் இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரிக்கும், சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும், sipcot போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் முத்து கணேஷ் , நேரில் விசாரணை செய்தார்.

மாடு செத்ததற்கான காரணத்தை அறிவதற்காக, மாடு ஜே.சி.பி மூலம் மேலே ஏற்றி ட்ராக்டர் மூலம்  சிப்காட் காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அவற்றை டார்கள் குழு இன்று பரிசோதனை செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாடு செத்து சம்பவம், அந்த கிராம மக்களை வருத்தம் அடைய செய்துள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo