Onetamil News Logo

காமராஜர் கல்லூரியில் 10வது தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சி கூடுதல் ஆட்சியர் (வருவாய்) பா.விஷ்ணு சந்திரன், தலைமையில் நடைபெற்றது.

Onetamil News
 

காமராஜர் கல்லூரியில் 10வது தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சி கூடுதல் ஆட்சியர் (வருவாய்) பா.விஷ்ணு சந்திரன், தலைமையில் நடைபெற்றது.


தூத்துக்குடி 2020 ஜன.25:தூத்துக்குடி காமராஜர் கல்லூரியில் 10வது தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சி கூடுதல் ஆட்சியர் (வருவாய்) பா.விஷ்ணு சந்திரன், தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி காமராஜர் கல்லூரியில் 10வது தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சி இன்று (25.01.2020) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வருவாய்) பா.விஷ்ணு சந்திரன்,  கலந்துகொண்டு விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வருவாய்) அவர்கள் தலைமையில் வாக்காளர் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. கலைநிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வருவாய்) அவர்கள் பேசியதாவது:
இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல்களில் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் அவசியம் குறித்தும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கடந்த 10 ஆண்டுகளாக தேசிய வாக்காளர் தினத்தினை கொண்டாடி வருகிறது.  தேசிய வாக்காளர் தினத்தில் அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுனங்களிலும் வாக்காளர் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு தேர்தலிலும் 30 சதவிதம் வாக்காளர்கள் வாக்களிக்காத நிலை உள்ளது. இதனை மற்றும் வகையிலும், அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தும்  வகையிலும் இதுபோன்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. 18 வயது முடிந்த அனைவரும் வாக்காளர் பட்டியலில் கண்டிப்பாக பெயர்களை சேர்த்திட வேண்டும். குறிப்பாக கல்லூரி மாணவர்கள்  அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திட உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தால்தான் ஜனநாயக உரிமை பெற்றவர்களாக முடியும்.  மேலும், வாக்களிக்கும் கடமையை செய்திட முடியும். வாக்காளர் விழிப்புணர்வு தினம் தேசிய அளவில் தமிழகத்தில்தான் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. நீங்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதுடன் மற்றவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும். ஜனநாயகத்தின் அடிப்படை நபராகிய ஒவ்வொருவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும் தேர்தல்களில் வாக்களிக்கவும் கடமைப்பட்டவர்களாகவும் உள்ளோம்.  எனவே அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திட வேண்டும் என கூடுதல் ஆட்சியர் (வருவாய்) அவர்கள் பேசினார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரோன் ஜீத் சிங் காலோன், , மாநகராட்சி தலைமை பொறியாளர் பார்த்திபன், தூத்துக்குடி வட்டாட்சியர் சிவக்குமார், காமராஜர் கல்லூரி முதல்வர் முனைவர் து.நாகராஜன், என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர்கள் ஆ.தேவராஜ், பா.பொன்னுத்தாய் மற்றும் அலுவலர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo