Onetamil News Logo

கமல்ஹாசன் மறுப்பு தெரிவித்தால் நான் சொன்ன கருத்தையும் வாபஸ்பெற்றுக் கொள்கிறேன்.  என்று தூத்துக்குடியில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்

Onetamil News
 

கமல்ஹாசன் மறுப்பு தெரிவித்தால் நான் சொன்ன கருத்தையும் வாபஸ்பெற்றுக் கொள்கிறேன்.  என்று தூத்துக்குடியில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்


தூத்துக்குடி 2019 மே 15; கமல்ஹாசன் மறுப்பு தெரிவித்தால் நான் சொன்ன கருத்தையும் வாபஸ்பெற்றுக் கொள்கிறேன்.  என்று தூத்துக்குடியில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்
மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசும் கமல்ஹாசனின் பிண்ணனி குறித்து மத்திய உளவுத்துறை விசாரனை நடத்த வேண்டும் என்று தூத்துக்குடியில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்
தூத்துக்குடி தனியார் விடுதியில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நிருபர்களிடம் கூறும்போது, சமுதாய சீர்கேட்டை உருவாக்கும் வகையில் மதநல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் கமலஹாசன் பேசி வருகின்றார்.
என்னை பதவி விலக சொல்லுவதற்கு கமல்ஹாசன் கட்சி ஒன்றும் ஐநா சபையின் அங்கீகாரம் பெற்ற கட்சி கிடையாது. நான் எங்கும் பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் பேசவில்லை.
இந்திய நாட்டின் முதல் தீவிரவாதி இந்து என்பது என்பதை கமல்ஹாசன் எப்படி சொல்லலாம். இலங்கையில் ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த ஒருவன் தற்கொலை படை தாக்குதலை நடத்தியுள்ளான். இந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
பயங்கரவாதிகள் தன் பிள்ளைகள் செத்தால் கூட கவலைப்படுவதில்லை அந்த அளவுக்கு மோசமான நிலையில் உள்ளனர். ஒரு மதத்தை கூறி தீவிரவாதம் என்று யார் சொல்வதையும் அனுமதிக்க முடியாது.தீவிரவாதிகள் நடத்தும் கொடூர தாக்குதலுக்கு குறிப்பிட்ட ஒரு மதம் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. எல்லா மதத்தினரும் பாதிக்கப்படுகின்றனர்.
இலங்கைக்கும் தமிழகத்திற்கும் தொப்புள் கொடி உறவு உள்ளது. அங்கு ஒரு பாதிப்பு என்றால் கூட தமிழகத்தில் வலி எடுக்கும். இலங்கையில் ஒரு அசாதாரணமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் இந்த வேளையில். சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி இந்து என்று கமலஹாசன் கூறியதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.
சுதந்திரத்துக்குப் பிறகு முகமது அலி ஜின்னா தலைமையில் ஒரு குழுவும் மகாத்மா காந்தி தலைமையில் ஒரு குழுவும் சேர்ந்து பேசி சுமூக முடிவு ஏற்படும் போது எத்தனை இந்துக்கள் கொல்லப்பட்டனர் எத்தனை இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். இது கமலஹாசனுக்கு தெரியுமா?
நமது இரு பிள்ளைகளும் இப்படி கொள்ளப்படுகிறார்களே என்று நினைத்து வாகா எல்லை கண்ணீர் விட்டு அழுதது. இதையெல்லாம் பார்த்து பார்த்து மதக்கலவரங்களும் குறைந்து இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாக உருவாகி உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் கமலஹாசனின் இந்த கருத்து இந்துக்களை வம்புக்கு இழுக்கின்ற வேலை. இதுபோன்ற செயல்களில் அவர் செய்யவும் கூடாது பேசவும் கூடாது.
கமலஹாசன் யாரை திருப்திப்படுத்த இந்தியாவின் பயங்கரவாதம் முதல் இந்து என்று கூறினார். ஐஎஸ் தீவிரவாதிகளிடம் கமல்ஹாசன் பணம் வாங்கிக் கொண்டு பேசுகின்றாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இரு மதத்திலும் ஏன் சண்டை இழுத்து விட நினைக்கின்றார். கமல்ஹாசனை மத்திய உளவுத்துறை கண்டிப்பாக விசாரணை நடத்த வேண்டும்.
இஸ்லாமியர்களை நான் இப்போது கூட அப்பு மார்கள் என்றுதான் உறவைச் சொல்லி கூப்பிடுவேன். தூத்துக்குடியில் நாலுமாவடியில் மோகன் லாசரை பார்த்து நான் ஆசி பெற்று தான் வந்துள்ளேன். கிறிஸ்தவ இஸ்லாமிய நடத்தும் நிகழ்ச்சிகளில் நான் அதிகமாக கலந்து கொண்டுள்ளேன்.
ஒரு வேகத்தில் பேசிவிட்டேன் என்று கமல்ஹாசன் மறுப்பு தெரிவித்தால் நான் சொன்ன கருத்தையும் வாபஸ்பெற்றுக் கொள்கிறேன். யாரையும் துன்புறுத்த வேண்டும், மனசு புண்படும்படி பேச வேண்டும் என்பது எனது நோக்கமல்ல. மக்களின் கோபங்கள் எப்படி வெளிப்படும் என்பதைத்தான் நான் கூறியிருந்தேன்.
அவர் திருந்துவதற்காக தான் அந்த வார்த்தையை நான் பயன்படுத்தினேன். நான் பேசியதை அவருக்கு ஆலோசனையாக  எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிற அராஜகமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
கமல்ஹாசன் பேசியதற்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் தலைவர் அழகிரி இந்தியாவில் வாழத் தகுதியற்றவர். அவர் இத்தாலி நாட்டிற்குதான் போக வேண்டும். இந்துகளை அவமரியாதையாக பேசிவிட்டு அதை ஆதரித்து பேசுவது முட்டாள்தனம்.
நான் பேசியது எதுவும் சட்டத்திற்கு விரோதமாக பேசவில்லை.. ஒரு மேடையில் சாதரண ஒருவர் பேசினால் அது பெரிய செய்தியாக வராது. கமல்ஹாசன் நடிகர் என்பதால் அவரது பேச்சு பெரிதாக பேசப்படும். கமல்ஹாசன் தவறான பேச்சை கண்டிக்காவிட்டால் அவர் பேசிக் கொண்டே இருப்பார்..
கமல்ஹாசன் பேச்சு நாட்டிற்கு ஆபத்தை ஏற்படுத்தும். சமூக நல்லினகத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தி கலவரத்தை தூண்டிவிடும். அதைதான் நான் கண்டித்தேன்.
அமைதியாக நடைபெறும் தேர்தலை மட்டுமல்ல அமைதியாக இருக்கும் தமிழ்நாட்டின் அமைதியை கெடுக்கும் வகையில் உள்ள கமல்ஹாசனின் பேச்சை அனைவரும் கண்டிக்க வேண்டும்.
எடப்பாடியார் ஆட்சியில் மதநல்லிணக்கமான ஆட்சி நடைபெற்று வருகின்றது. பிரிவினவாதத்தை தூண்டும் வகையில் செயல்படும் கமல்ஹாசனின் கட்சியை தேர்தல் ஆணையம் தடை செய்ய வேண்டும்.
கமல்ஹாசன் தனி வாழ்வில் ஒழுக்கம் இல்லாதவர். அவரை பற்றி நிறைய குற்றச்சாட்டு வைக்கலாம். அரசியலில் வர அவருக்கு தகுதி கிடையாது.ஸ்டாவின் ஒரு அரசியல் பச்சோந்தி. அவரை நம்பி சென்றவர்களை நட்டற்றில் விட்டு சென்றுவிடுவார். ஒரு நிலைப்பாட்டில் இருக்க மாட்டார். தற்போது பாரதிய ஜனதாவின் 2ம் கட்ட தலைவர்களோடும் ஸ்டாலின் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றார்.திமுக எந்த எம்பி தொகுதியிலும் ஜெயிக்க முடியாத நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார் என்று தெரிவித்தார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo